தமாகா., மூத்த தலைவர் ஞானதேசிகன்(71) உடல்நலக்குறைவால் இன்று(ஜன.,15) காலமானார். அவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
த.மா.கா., மூத்த தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த நவ.,11ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், இன்று அவர் காலமானார். 2001 முதல் 2013ம் ஆண்டு வரை இரு முறை ராஜ்யசபா எம்.பி.,யாகவும் இருந்துள்ளார். 2009ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை தமிழக காங்கிரஸ் தலைவராகவும் இருந்துள்ளார்.
அவரது மறைவுக்கு பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
திமுக தலைவர் ஸ்டாலின்
தமாகா துணைத்தலைவர் ஞானதேசிகன் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனைக்கு உள்ளானேன். இந்திய, தமிழக அரசியலில் பெரும் பங்காற்றிய அவர், நம் நெஞ்சங்களில் நீங்கா இடம் கொண்டவர். அவரை பிரிந்து வாடும் உற்றார், உறவினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்
தமாகா தலைவர் வாசன்
தமிழக மக்கள் எண்ணங்களை பார்லிமென்டில் பிரதிபலித்தவர் ஞானதேசிகன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், த.மா.கா.,வினருக்கு ஆழ்ந்த இரங்கல்
தெலுங்கானா கவர்னர் தமிழிசை
யாருடைய மனதும் புண்படாமல் பேசும் சிறந்த பண்டாளர் ஞானதேசிகன். அவரின் மறைவு செய்தியை அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி
தலைவர்கள் தவறான முடிவு எடுக்கும் போது இது சரிவராது என தைரியமாக கூறியவர் ஞானதேசிகன். அவரின் மறைவு தமாகா.,வுக்கு பேரிழப்பு
தனது பண்பாலும், பணிவாலும் பலருடன் நட்பை பேணி காத்தவர் ஞானதேசிகன் என முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்ம் ஆகியோர் ஞானதேசிகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment