Wednesday, January 13, 2021

மொதல்ல நீங்க ஒரே மாதிரி தீர்ப்பு சொல்ல கத்துக்கோ.

 நீதிபதிகளுக்கு நாட்டை ஆளனும்னு ஆசை இருந்தா பதவிய ராஜினாமா செஞ்சிட்டு ஏதாவது ஒரு கட்சில சேந்து MP யாகி பிரதமராகி நாட்டக் காப்பாத்தலாமே-

அதைவிட்டுட்டு நூறு கோடி மக்கள் தேர்தெடுத்த அரசாங்கம் எது செஞ்சாலும் நொட்டை சொல்லிகிட்டு இருக்கறது எதுக்காக? -
பத்து வருஷம் பொய் சொல்றத மட்டுமே பொழப்பா வெச்சிருக்கற வக்கீல்கள் நீதிபதி ஆனா மட்டும் புனிதர்கள் ஆகிடுவாங்களா? -
ஒரு நீதிபதி எட்டுவழிச் சாலை வழக்கில் ரோடு போட்டா சோறு எப்படி கிடைக்கும்னு சீமான் தம்பி மாதிரி பேசறான் -
அப்ப, இப்ப நாம பயன்படுத்தற ரோடுகளுக்கெல்லாம் நிலம் குடுத்தவன்லாம் இளிச்சவாயா?-
ஒரு நீதிபதி நாங்க வேகமாப் போயி தீர்ப்பு சொல்லனும் எனக்கு டோல்கேட்ல தனி வரிசை வேணும்ன்றான் -
ஓசில போற உனக்கே தனி வரிசைனா, காசு கொடுத்து மணிக்கணக்குல காத்துக்கெடக்கறவன்லாம் முட்டாப் பயலா? -
ஒரு நீதிபதி நீ குற்றவாளி உனக்கு 100 கோடி அபராதம் 4 வருஷம் ஜெய்ல்ன்றான் -
அதே வழக்குல இன்னொரு நீதிபதி நீ நிரபராதின்னு விடுதலை பண்றான் -
மூணாவது நீதிபதி மறுபடியும் குற்றவாளின்றான் -
மொதல்ல நீங்க ஒரே மாதிரி தீர்ப்பு சொல்ல கத்துக்கோங்கடா -
எங்கள 5 வருஷம் ஆளத்தான் நாங்க நம்பிக்கை வெச்சு தேர்ந்தெடுத்த அரசாங்கம் இருக்கு-
அவங்க கொண்டுவர்ற திட்டங்கள் மேல எங்களுக்கு நம்பிக்கையிருக்கு, எதிர்ப்ப காட்டனும்னா அடுத்த தேர்தல்ல காட்டுங்கடா -
எல்லா விஷயத்துலயும் மூக்கை நொழைச்சிகிட்டு_
தேசப்பணியில் என்றும் -
🕉️🇮🇳🕉️🇮🇳🕉️🇮🇳🕉️🇮🇳🕉️
பி.கு:- இதை நீதிமன்ற அவமதிப்பாகக் கருதினால் பிரஷாந்த்பூஷன் போல் ஒற்றை ரூபாய் அபராதம் வட்டிக்கு வாங்கியாவது கட்டிவிடுகிறேன் யுவர் ஆனர் -

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...