Tuesday, August 10, 2021

ரூ.3.50 கோடி டெண்டரில் சண்டை; 'ஓப்பன்' ஆனது தி.மு.க., நிர்வாகி மண்டை.

 சிவகங்கையில், குடிநீர் வாரிய பராமரிப்பு பணிகளுக்கான 3.50 கோடி ரூபாய் டெண்டர் ஏலத்தில், தி.மு.க.,வினர் இடையே தகராறு ஏற்பட்டது.

 ரூ.3.50 கோடி டெண்டரில் சண்டை; 'ஓப்பன்' ஆனது தி.மு.க., நிர்வாகி மண்டை
இதில், தி.மு.க., நிர்வாகியின் மண்டை உடைக்கப்பட்டது.சிவகங்கையில் குடிநீர் வாரிய பராமரிப்பு பணிகளுக்காக, தொண்டி ரோட்டில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் நேற்று டெண்டர் ஏலம் நடந்தது.மொத்தம், 3.50 கோடி ரூபாய் மதிப்பில், சிவகங்கை மாவட்ட கிராமப்புற குடிநீர் திட்ட பராமரிப்பில் 27 பணிகள், ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தின் ஆறு பணிகளை டெண்டர் எடுக்க, ஒப்பந்ததாரர்கள் திரண்டனர்.

தி.மு.க., தரப்பினரும் பங்கு பெற்றனர்.டெண்டர் ஏலம் முடிந்து மாலை 4:00 மணிக்கு வெளியே வரும்போது, தி.மு.க., மாவட்ட துணைச் செயலர் சேங்கை மாறன், கோவானுார் பகுதியைச் சேர்ந்த தொகுதி அமைப்பாளர் சோமன் தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது.சேங்கை மாறன் தரப்பு தாக்கியதில், சோமனுக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. சோமன் தரப்பினர், சேங்கை மாறன் தரப்பினரின் காரை தாக்கினர். போலீசார் வந்ததும், அங்கிருந்து சென்றனர்.சோமன் கூறுகையில், ''என்னை கொல்லும்படி சேங்கை மாறன் தரப்பினர் கூறியதோடு, சேங்கை மாறனும் தாக்கினார்,'' என்றார்.

சேங்கைமாறன் கூறுகையில், ''டெண்டர் முடிந்து, மாலை 3:30 மணிக்கு அங்கிருந்து வெளியேறி விட்டேன். எனக்கும், இந்த சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை,'' என்றார்.குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் ஐனான் கூறுகையில், ''சிவகங்கை, ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்ட பராமரிப்பில், 33 பணிகளுக்கான டெண்டர் நடந்தது. ''எந்த பிரச்னையும் ஏற்படாமல் டெண்டர் நிறைவு பெற்றது,'' என்றார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...