Wednesday, August 11, 2021

வெள்ளை_அறிக்கை ..

 மாநிலத்தின் வருமானம் சரிவு ஏன்?

இதில் முக்கியமான 3 பிரிவுகள் உள்ளன.
நமது கடன் நிலை என்ன,
வருமானம் எப்படியெல்லாம் மாறியுள்ளது,
செலவினம் எப்படியெல்லாம் மாறியுள்ளது ...
என்பது மிக முக்கியமானவை.
பொதுத்துறை நிறுவனங்களான மின்வாரியம், போக்குவரத்துக் கழகம், குடிநீர் வடிகால் வாரியம், மெட்ரோ குடிநீர் வாரியம் போன்றவை எந்தநிலையில் உள்ளது என்பதையும் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
நாட்டின் வளர்ச்சி, வேலைவாய்ப்பின்மை, வருமானம் எப்படி மாறியுள்ளது என்பதைப் பார்த்தால் அதனை ஒரு பாடமாக எதை எடுத்துக் கொள்ளலாம்.
இதுதொடர்பான விரிவான விவரங்களை வெள்ளிக்கிழமையன்று பட்ஜெட் தாக்கல் செய்யும்போது பார்க்கலாம்.
வருமானம் இல்லாத அரசாங்கத்தால் செலவுகளைக் குறைக்க முடியாது.
நமது மாநிலத்தின் வருமானம் சரிந்துவிட்டது.
இதைப் பற்றி சட்டமன்றத்தில் பேசியுள்ளோம்.
இந்திய ரிசர்வ் வங்கி இதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளது. 15 ஆவது நிதிக்குழுவும் இதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளது.
♦வருவாய் பற்றாக்குறை 3.16 சதவிகிதம்♦
ஆண்டுதோறும் வரும் இந்திய அரசின் தணிக்கை அறிக்கையில், எந்தளவுக்கு நிதிக்குழு நிதி ஒதுக்கியதோ,
அந்த எதிர்பார்ப்புக்கும் நடந்த சூழலுக்கும் இடையில் ஆண்டுதோறும் 55,000 கோடியில் இருந்து 70,000 கோடி வரையில்
குறைவாக உள்ளது. தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை என்பது 3.16 சதவிகிதமாக உள்ளது.
கடந்த 2006-11 ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சியில் உபரி வருமானமாக சில வருடங்களும் சில வருடங்கள் பற்றாக்குறையிலும் இருந்தது.
குறிப்பாக, கடைசி 2 வருடங்கள் பற்றாக்குறையில் இருந்தது.
மொத்தமாக, 5 ஆண்டுகால ஆட்சியைப் பார்த்தால் உபரி வருமானம் இருந்தது.
அடுத்து வந்த ஜெயலலிதாவின் ஆட்சியில் ஓரளவுக்கு வருவாய் மேலாண்மை இருந்துள்ளது.
ஆனால், அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு, சிறைவாசம் போன்ற காரணங்களும் இருந்தன.
அப்போது 17,000 கோடி அளவுக்கு வருவாய் பற்றாக்குறை இருந்தது.
கடைசி ஐந்து வருடங்களில் பார்த்தால் 1 லட்சத்து 50,000 கோடி அளவுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
கடந்த 5 வருடத்தில் பொதுக்கடன் என்பது 3 லட்சம் கோடி ரூபாயாக இருந்துள்ளது.
அதில் 50 சதவிகிதம் என்பது தினசரி செலவு என்ற அடிப்படையில் செலவழிக்கப்பட்டுள்ளது.
ஒருகாலத்தில் ஊதியம், ஓய்வூதியம், வட்டி ஆகியவற்றுக்கு என வருமானம் வந்து கொண்டிருந்தது.
அதேநேரம், கடனை வாங்கி கட்டாய செலவை செய்வதும் நடந்துள்ளது.
இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் இந்தளவுக்கு செயல்படவில்லை.
மகாராஷ்ட்ரா, குஜராத் போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்று நிதிநிலையில் சீர்கேடுகளை ஏற்படுத்தவில்லை.
நாம் ஏற்கெனவே சரிந்திருந்ததால் இந்தளவுக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்"
♦13 மடங்காக உயர்ந்த கடன் அளவு♦
, ``இன்றைக்குள்ள சூழலில் 2 கோடியே 16 லட்சம் குடும்பங்கள் இருப்பதாக எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு குடும்பங்களின் தலையிலும் 2 லட்சத்து 63,976 ரூபாய் கடன் உள்ளது.
இது பொது சந்தா கடன் மட்டுமே.
தமிழ்நாட்டில் 2001 ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சிப் பொறுப்பில் இருந்து வெளியேறியபோது கடன் அளவு என்பது 34,540 கோடி ரூபாயாக இருந்தது.
அதே ஆண்டு அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு ஆகஸ்ட் 18 அன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டின்போது, நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியானது.
தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சி முடியும் காலத்தில் கடன் அளவு என்பது 63,848 கோடியாக உயர்ந்தது.
2011 ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சி நிறைவடையும் காலத்தில் கடன் அளவு என்பது 1.14 லட்சம் கோடியாக இருந்தது.
அதன்பிறகு 2011-16 ஆம் ஆண்டுகளில் கடன் அளவு 2.28 லட்சம் கோடியாக அதிகரித்தது.
2016 ஆம் ஆண்டில் மீண்டும் அ.தி.மு.க ஆட்சியமைந்த பிறகு 2021 வரையில் கடன் அளவானது 4.85 லட்சம் கோடியாக அதிகரித்தது.
2021 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது கடன் அளவு 4 லட்சத்து 85 ஆயிரத்து 502 கோடியே 54 லட்சம் என அறிவிக்கப்பட்டது.
இந்த ஆண்டு இறுதிக்குள் 5.70 லட்சம் கோடியாக உயரும் எனவும் கூறப்பட்டது.
நமது மாநிலத்தின் கடன் அளவு கடந்த 20 ஆண்டுகளில் 13 மடங்கு உயர்ந்துள்ளது'' .

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...