நேற்று எதேச்சையாக ஒரு முகநூல் பதிவில் ஒருவர் ஒரு வீடியோவை இணைத்திருந்தார்.
அது இளையராஜா பாடலை இருவர் பாடிக் கொண்டிருந்தனர்.
எனக்கு சாதாரணமாக இந்த லைட் மியூசிக் என்ற பேரில் கல்யாணங்களில் வந்து ஒரிஜினல் பாடல்களை வதைத்து சிதைத்து கர்ணகடூரமாக சத்தமிடும் கூட்டத்தை பிடிக்காது.
ஒரிஜினலை டூப்ளிகெட் நிச்சயமாக நெருங்க முடியாது என்பதில் நம்பிக்கையுடவன்.
ஆனால் பாருங்கள்.. எதையெச்சையாக பகிரப் பட்ட வீடியோ பக்கம் போனேன். பாடிய பெண் லட்சணமாக இருந்ததால் போனேன் என்று என் மனைவி குற்றம் சொல்வார் .
ஆனால் என்ன அதிசயம்!!!. அங்கு ஒரு சிறந்த முயர்ச்சியை கண்டேன். உள்ளூரில் இருந்தாலும் நேரில் வந்து பாட முடியாத இந்த சூழலில் இந்த சினிமா இசை பைத்திய கூட்டம் உலகெங்கும் இருக்கும் பாடகர்கள் மற்றும் வாசிப்பாளர்களை அழகாக ஒருணங்கிணைத்து அசத்துகிறது.
இதில் பாடுபவர்கள் இசைப்பவர்கள் எல்லாம் எத்தனை திறமையான இளம் வயதினர்.!! எத்தனை அழகாக பாடுகின்றனர்!!! இவர்கள் எல்லாம் வேறு ஏதோ துறையில் தம் பிழைப்பை நடத்துபவர்கள் தான். அதை தாண்டி தன் திறமைகளை வெளிப்படுத்துகின்றனர்.
அற்புதம் என்பதுதான் ஒரே வார்த்தை !
இதையெல்லாம் தாண்டி நான் வியந்த விஷயம் இதை பூத்தொடுப்பது போல அழகாக ஒருங்கிணைக்கும் திருமதி. சுபஸ்ரீ தணிகாசலம்.
இந்த பெண்மணி தொலைக்காட்சி தயாரிப்பாளராக 25 வருடங்களுக்கு மேல் இருப்பவர். என் நண்பனின் மனைவி கூட கொஞ்ச காலம் இவரின் கீழே பணி புரிந்ததாக நினைவு !
ஆனால் இந்த திருமதி.சுபஸ்ரீ தணிகாசலம் ஒவ்வொரு பாட்டையும் அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து ரசித்து அதன் அழகை விளக்கி சொல்லும் முறை அருமை. அடுத்த முறை அதே பாட்டை கேட்கும் போது இவர் சொன்ன சங்கதிகளை கவனமாக கேட்டு மீண்டும் ராஜா, விஸ்வநாதன், மகாதேவன் போன்றவர்களின் மேதமையை மீண்டும் உணர்ந்து ருசிக்க முடிகிறது.
இதே சுபஸ்ரீ யின் பல சாதனைகளில் "சென்னையில் திருவையாறு" யும் ஒன்று பலரும் அறிவார்கள். இவர் ஒரு திரை இசை தகவல் பொக்கிஷமாக திகழ்கிறார்.
நான் மேலே குறிப்பிட்ட நிகழ்ச்சி சுபஸ்ரீ தணிகாசலத்தால் www.maximuminc.org என்கிற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் யு ட்யூப் ல் RagamaligaTV என்கிற பெயரில் ஒளிபரப்புகிறார்.
யாருடைய "ஸ்பான்சர்ஷிப்" ம் இன்றி கிரவுட் funding மூலமாக மட்டுமே பணம் பெறுகிறார். ஆனால் தயாரிப்பில் எந்த வித சமரசமும் இல்லை. சிறப்பாக உள்ளது.
அரசியல் இல்லாத பதிவு !ிக்கும் எல்லோரும் அருமை!!, நெற்றி நிறைய வீபூதியுடன் வந்து வெளுத்து காட்டும் தாளவாத்திய ஸ்டார் வெங்கட்.. கீ போர்ட் வாசிக்கும் பெஞ்சமின், பெண்கள் அதிகம் வாசிக்காத வாத்தியமான சாகஸபோன் ஐ ஆனாசயமாக வாசிக்கும் கீர்த்தனா, கிடார் சந்திரசேகர் இப்படி பட்டியல் வெகு நீளம்.
இளம்பாடகர்கள் ஒவ்வொருவரும் ஒரு ரத்தினங்கள்.
இப்படி ஒரு அற்புதமான நிகழ்ச்சியை நடத்தி நல்ல விஷயங்களை பதிவு செய்யும் சுபஸ்ரீ தணிகாசலம் அவர்களுக்கு பல நன்றிகள்.
நல்ல பாடல்களின் ரசிகர்களாகிய நாம் நிச்சயம் இது போன்ற முன்னெடுப்புகளை போற்றி பாராட்டி ஊக்குவிக்க வேண்டும்.
முடிந்தவர்கள் தங்களால் இயன்ற நிதியும் அளிக்கலாம்.
நல்ல விஷயங்களை போற்றத் தவறினால் உங்களுக்கு டன்டானக்கா .. டனக்கு னக்கா மட்டுமே மிஞ்சும்.
நன்றி !
பி. கு:- இதே போல முன்பு ஜெயா டிவியில் "சொக்குதே மனம்" என்று ஒரு நிகழ்ச்சியில் மிகப் பழைய ஜிக்கி காலத்து பாடல்களை (ஜி. ராமநாதன், கண்டசாலா) பாடி ஒரு அழகான மேற்கு மாம்பல பெண்மணி அசத்தினார் என்று நினைவு.
No comments:
Post a Comment