*****
சந்தோஷத்தில் மிதந்தாள் சியாமளா.
ஆமாம்...நாலு ஆண்டுகளாக தன் ஒரே பையன் ரகுவிற்கு பெண் தேடி
அலுத்துப் போய், இதோ இப்போது அம்பாள் அருளால்
ஜனனி என்ற பெண்
மாட்டுப் பெண்ணாக
வரப் போகிறாள்.
ஜாதகம், படிப்பு, அழகு
குடும்பப் பின்னணி,
என இரு வீட்டாருக்கும் பிடித்து
போக நிச்சயதார்த்தம்
முடிந்து வீட்டிற்கு வந்தது முதல் கல்யாணக் கனவில்
மிதந்தாள் சியாமளா.
ஆம்..ஒரே பையன் கல்யாணம் ஆயிற்றே...!
பெண் மற்றும் அவள்
பெற்றோர்கள் ஆறு
ஆண்டுகளாக அமெரிக்காவில் இருந்து விட்டு ( பெண் அங்கே வேலை பார்த்ததால்
துணைக்கு) இன்னும் மூன்று மாதத்தில் இந்தியா வரப் போகிறார்கள். வந்தவுடன் கல்யாணம். சியாமளாவின் கணவர் பாலுவிற்கும் பரம சந்தோஷம். கல்யாணக் கவலை
தீரப் போவதால்.
ரகு சென்னை திரும்பி விட்டான் வேலைக்கு..
அப்பா அம்மா பெரியகுளத்தில்...
ஒரு வாரம் கழித்து அமெரிக்காவில் இருந்து ஃபோன்.
சியாமளா மகிழ்ச்சியுடன் "என்ன.. கல்யாண வேலை எல்லாம் ஆரம்பிச்சாச்சா..."
எனக் கேட்க " அது விஷயமாக
பேசத்தான் ஃபோன்
செஞ்சோம்" என மறுமுனை பதில்.
" சொல்லுங்கோ"
கவலையில் சியாமளா.
" மாமி..ஜனனிக்கு
க்ரீன் கார்டு கிடைச்சாச்சு. கம்பெனியிலும் புரோமோஷன் குடுத்துட்டா.. அதனால் நாங்க இங்கேயே செட்டில்
ஆகலாம்னுட்டு இருக்கோம்.ஓங்க பையன் கம்பெனியும்
இங்கதானே இருக்கு.
அவர் டிரான்ஸ்ஃபர்
வாங்கிண்டு வந்தால்
இங்கேயே செட்டில் ஆயிடலாம். ஆத்துல
எல்லோரையும் கலந்து பேசி சொல்லுங்கோ...
இதுக்கு சம்மதம்னா
மேல பேசலாம்."
சியாமளா விக்கித்து விட்டாள். கணவருடன் அன்று முழுவதும் கலந்து பேசி வேறு வழி இல்லை. பையனின்
திருமணம் முக்கியம்
என்பதால் சம்மதம் சொல்லத் தயார் ஆனார்கள். ( "நம்ம வயசான கட்டைகள்..
அவனாவது நிம்மதியா இருக்கட்டும்.நாம் கோவில்,குளம் அப்படீன்னு வாழ்க்கையை கழிச்சிடலாம்")
நடந்த விபரங்களை
ரகுவிடம் ஃபோனில்
கூறி, தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை... அவன் திருமணம் செய்து கொண்டு நன்றாக இருந்தால் சரி என்றனர்.
மறுநாள் அவர்களுக்கு ஒரு கூரியர் தபால்.
ரகுவிடமிருந்து......
" அன்புள்ள அம்மா அப்பா. நமஸ்காரம்.
எப்படியாவது எனக்கு
கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்ற உங்கள் உயரிய
நோக்கத்திற்கு நன்றி.
அதற்கு முன் சில வார்த்தைகள்..
இரண்டு நாள் லீவு கிடைத்தாலும் உங்களைப் பார்க்க
ஓடி வருவேனே... அந்தப் பாசத்தை அமெரிக்கா தருமா
அம்மா?
வந்தவுடன் ஆத்து ஹாலில் துண்டை விரித்துப் படுத்தவாறு, ஜன்னல்
காற்றை அனுபவிக்கும் சுகம்
அமெரிக்காவில் கிடைக்குமா அம்மா?
உன் கையால் போடும்
தயிர் ஊற்றிய பழைய சாதமும் மாவடு ருசியும் அமெரிக்காவில் கிடைக்குமா அம்மா?
ஊர் திரும்பும் போது எனக்குப் பிடித்த
நீ அன்புடன் செய்து தரும் முள்ளுத்
தேங்குழல், வெல்லச்
சீடை , பாசத்துடன் அங்கே கிடைக்குமா
அம்மா?
ஆவணி அவிட்டத்திற்கு நமஸ்காரம் செய்த பிறகு நீயும் அப்பாவும்
தரும் நூறு ரூபாய்
ஆயிரம் அமெரிக்க
டாலருக்கு ஈடாகுமா
அம்மா?
உடம்பு சரியில்லை என எப்போதாவது நான் படுத்தால்,
கவலையுடன் நீ செய்து தரும் ஜீரக ரசமும், சுட்ட அப்பளமும் அன்புடன்
செய்து தர அமெரிக்காவில் ஆள்
கிடைக்குமா அம்மா?
நான் எவ்வளவு சம்பாதித்தாலும்
தீபாவளிக்கு நீங்கள்
வாங்கித் தரும் நம்
ஊர் செட்டியார் கடை
டிரெஸ் போல அமெரிக்காவில் கிடைக்குமா அம்மா?
கொட்டும் மழையிலும் நனைந்தவாறு குடையுடன் பஸ் ஸ்டாப் வந்து வீட்டிற்கு அழைத்து வரும் அப்பாவின் அன்பு
அமெரிக்காவில் கிடைக்குமா அம்மா?
என் கல்யாணத்திற்காக
எவ்வளவு விரதங்கள்
எவ்வளவு பட்டினிகள்
எவ்வளவு உடல் உறுத்தல்கள்...!
இதற்கு மருந்து தேடவா என்னை
அமெரிக்காவிற்கு
அனுப்புகிறாய் அம்மா?
ஆயிரம் ஜனனி கிடைப்பாள் அமெரிக்காவில்...
ஆனால் அன்பு சியாமளா அம்மா
கிடைப்பாளா..?
கல்யாணம் என்ற
கடமைக்காக என்னை
உன் பார்வையில் இருந்து *அமெரிக்காவில்*
*விற்று விடாதே* *அம்மா* ....
அதைவிட
பிரம்மச்சாரியாக
எப்போதும் உன்னைப்
பார்த்துக் கொண்டு இருக்கும் பாக்யத்தை
வரமாகத் தருவாயா
அம்மா...?
உன் ப்ரிய
ரகு.
அலைகடல் தாண்டிய
பிள்ளைகளை நினைத்து ஏங்கும்
அம்மாக்களுக்கு
சமர்ப்பணம்.
No comments:
Post a Comment