#எத்தனை பேருக்கு ஒரு 95 வயது கிழவனின் மரணத்தில் ஆனந்தம், வன்மம்.
கேட்டால் காரணம் சொல்வார்கள்,
ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்தாராம்,அவர்களுக்கென்ன தெரியும். ஈழத் தமிழர்களுக்காக இரு முறை ஆட்சியை இழந்தவன் நீயென்று.
காமராசருக்கு பிறகு அணை யாரும் கட்டவில்லையாம், அவர்களுக்கென்ன தெரியும் காமராசர் காலத்திற்கு பிறகு கட்டப்பட்ட 39 அணைகளும் உன் ஆட்சியில் கட்டியதென்று.
காமராசரை திட்டிவிட்டாயாம், தோற்கடித்து விட்டாயாம். அவர்களுக்கென்ன தெரியும் என் ஆட்சியே போனாலும் சரி நான் என் ஐயாவை கைது செய்ய மாட்டேன் என்று இந்திராவையே எதிர்த்தவன் நீயென்று.
இந்துக்களுக்கு துரோகம் செய்து விட்டாயாம், அவர்களுக்கென்ன தெரியும் இந்து கோவில்களுக்கு அறைநிலையத் துறை அமைத்து 3000 கோவில்களுக்கு மேல் சீர் செய்து கும்பாபிஷேகம் செய்தது நீயென்று.
விவசாயிகளைக் கை விட்டு விட்டாயாம், அவர்களுக்கென்ன தெரியும் 30 ஆண்டுக்கு முன்பே விவசாயிகளுக்கு முழுமையாய் இலவச மின்சாரம் தந்தவன் நீயென்று, முதன் முதலில் விவசாய கடனை முழுமையாய் தள்ளுபடி செய்தவன் நீயென்று, விவசாயிக்கு நேரடி சந்தை உருவாக்கியவன் நீயென்று.
நீ கட்டிய கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்து ஏறி, நீ கட்டிய கத்திப் பாரா பாலத்தைத் தாண்டி, நீ கட்டிய சிப்காட்டில் பணி செய்து கொண்டே உன் இறப்பை எதிர் பார்ப்பவர்களைக் கண்டால், உள்ளம் குமுறுகிறது.
மரணம் எல்லாருக்கும் பொதுவானது, இதிகாசத்தில் வரும் அவதாரங்களுக்கு கூட மரணம் உண்டு. அதை கேலி செய்யும் நண்பர்களைப் பார்த்தால் அவர்கள் ஒரு வேளை மரணமற்றவர்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.
. மீண்டும் வருவாய், மீண்டு வருவாய் என்று காத்திருக்கிறேன்
Memories of kalainar
No comments:
Post a Comment