Thursday, August 5, 2021

நடை முறையில்...

 ஆண் மூலம் அரசாளும், பெண் மூலம் நிர்மூலம்.

மகம் ஜகம் ஆளும்,
சித்திரை நித்திரை போக்கும்,
பரணி தரணி ஆளும்,
திருவாதிரை தில்லு முல்லு,
அவிட்டம் பிறந்தால்,
தவிட்டு பானையில் கைவிட்டாலும் பவுன் கிட்டும்.
உத்திரம் பத்திரமாக்கும்..
ஆயில்யம், மாமனார், மாமியார்க்காகாது, விசாகம் மச்சினர்க்காகாது...
இப்படி எவ்வளவு... நடை முறையில்...
இதில் எவ்வளவு உண்மை... யாருக்கும் தெரியாது. இப்பல்லாம் பொண்ணு கிடைச்சா போதும் என்பதே என் பார்வை...
ஆனால், ஆயில்யம் திருமணம், விசாகம் இவற்றில் திருமணம் செய்து மிக நன்றாக உள்ளனர்.. அவர்கள் பையன்கள் கூட வேலைக்கு சென்று விட்டனர்.
மகத்தில் நிறைய கஷ்டமா உள்ளவர்கள், அதுவும் வியாதியுடன் போராடுபவர்கள் கூட பார்த்துள்ளேன்.
அவிட்டம் பிறந்தால் தவிட்டுப்பானையில் கை விட்டால்.. அவிட்டம் மட்டுமல்ல... எந்த நட்சத்திரம் பிறந்தாலும் பெரியவர்கள் ஏதாவது, போட்டு வைத்திருந்தால் கிடைக்கும்..
எங்க பகுதியில் வட்டிக்கு பணம் குடுப்பவர்கள், தவிட்டு பானையில் சிறிது நேரம், வைத்து கடன் தருவார்கள், வட்டிக்கு வாங்கியவன், சமான்யாமா திருப்பி தர முடியாது...
வட்டி வளரும் என்பது குடுப்பவன் நம்பிக்கை.
வட்டி, வட்டிக்கு வட்டி என செலுத்தியவர்கள் உண்டு.. அதில் அவர்கள் கற்றது கடன் வாங்க கூடாது என்பதே...
குழந்தை ரோகிணில பிறந்தால் மாமாவை அடித்து விடும் என்பார்கள்..
மாமா அயோக்கியன்னா, மோசமானவன்னா சில குழந்தை கிருஷ்ணன் ரோகிணியில் பிறப்பை சரி எனலாம்..
ஒன்று மட்டுமே உண்மை.. நாம் நல்லது செய்து நல்லது நினைத்தால்.. நிச்சயம் நல்லதே நடக்கும்...
ஒரு வேளை கஷ்டம் வந்தாலும், உதவி செய்யஎங்கிருந்தாவது கரங்கள் கடவுள்
அனுப்பி வைப்பார் என்பதே உண்மை..
அவ நம்பிக்கையுடன் பார்க்கும் பார்வை நல்ல ரிசல்ட் தராது..
நல்லதை விதைப்போம்....
எந்த நட்சத்திரத்தை நாம் த்வேஷம் செய்கிறோமோ,, அது நம்முடனே ஏதோ ரூபமா வந்து விடும் என்பது உண்மை என
நிறைய பெரியவர்கள் சொல்லி உள்ளனர்...
எந்த நட்சத்திரமும், நல்லதே...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...