Saturday, August 7, 2021

ஒரு விந்தையான வழக்கு!

  இப்போதைய தமிழக தி மு க அமைச்சரவையில், மின்சாரத் துறை அமைச்சராகப் பணியாற்றும் , கரூர் தொகுதி எம் எல் ஏ, செந்தில் பாலாஜி, 2011-2015 வாக்கில், அ இ அ தி மு க வின் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் அரவக்குறிச்சி தொகுதி சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகவும் இருந்தார்.

செந்தில் பாலாஜி, போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த காலத்தில், தன் அந்தரங்க செயலாலர்கள், பி ஷண்முகம், எம் கார்த்திக், போக்குவரத்த்யுத் துறையின் பல்வேறு மண்டல மேலாளர்கள், மற்றும் அதிகாரிகளுடன் சேர்ந்து, சதி செய்து, போக்குவரத்துத் துறையில் அலுவலர், டிரைவர், கண்டக்டர், பொறியாளர் போன்ற வேலைகளை வாங்கித் தருவதாகக் கூறி, கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகார்களை மத்திய குற்றப் பிரிவு விசாரித்து வந்தது. இந்த வழக்குகளில் செந்தில் பாலாஜி உள்பட 46 பேர் மீது, சென்னையில் உள்ள பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் மீதுள்ள கிரிமினல் குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு நீதி மன்றத்தில், இந்தியத் தண்டனை சட்டப் (IPC ) பிரிவுகள் 465, 468, 471, 420, 120-பி ஆகிய பிரிவுகளின் கீழும், லஞ்சத் தடுப்பு சட்டத்தின் (Prevention of corruption Act ) கீழும், குற்றப் ப்த்திரிகை தாக்கல் செய்யப் பட்டுள்ளது. வழக்குகள் நிலுவையில் உள்ளன.
முதல் புகார் எஸ் தேவசகாயம் என்பவர் கொடுத்ததாகும். தன் மகனுக்கு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தர, செந்தில் பாலாஜிக்கு லஞ்சம் கொடுக்க, 2.6 லட்சம் பனத்தை சி பழனி என்பவர் மூலம் கொடுத்ததாக அவர் சொல்லி இருக்கிறார். இதைப் போல நிறையப் புகார்கள் பிறகு நடந்த போலீஸின் விசாரணையில் பெறப் பட்டுள்ளன.
இவ்வழக்குகள், சிறப்பு நீதிமன்ற நீதிபதி “அலீஷியா” முன்பு 6-8-2021 அன்று விசாரணைக்கு வந்தன. அப்போது செந்தில் பாலாஜி நீதி மன்றத்தில் ஆஜராக வில்லை, அவர் வக்கீல் ஆஜரானார். அவர் நீதிபதியிடம்,
1. அமைச்சர் செந்தில் பாலாஜி, பல்வேறு அரசுப் பணிகளில் மூழ்கி இருப்பதால், நேரில் நீதி மன்றம் வர முடியவில்லை என்றும்,
2. செந்தி பாலாஜி, தன்னைப் பற்றி, புகார் அளித்தவர்ளுக்குக் கொடுக்க வேண்டியப் பணத்தைக் கொடுத்து சரி கட்டி ( Settled) விட்டதாகவும்,
3. அதனை ஏற்று, 10 நாட்கள் முன்பு, உயர் நீதி மன்றம், செந்தில் பாலாஜி மீதிருந்த குற்றப் பத்திரிகைகளை விலக்கிக் கொண்டு விட்டதாகவும்,
ஒரு வாதத்தை வைத்து அசத்தினார்!
நீதிபதி , செந்தில் பாலாஜியின் வக்கீல் வாதத்தின் மீது, உயர் நீதி மன்ற ஆணையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை 19-8-2021 க்கு ஒத்தி வைத்துள்ளார்.
2020-ல், செந்தில் பாலாஜி, சென்னை உயர் நீதி மன்றத்தில், ஒரு வழக்கைத் தொடுத்து, தன் மீது அருள்மணி என்பவர் 40 லட்சம் வேலை வாங்க வேண்டிக் கொடுத்ததாக அளித்துள்ள முதல் தகவல் அறிக்கையையும், போலீஸ் விசாரணையையும், குற்றப் பத்திரிகையையும் விலக்கிக் கொள்ளக் கேட்டிருந்தார். என்று செய்தி வந்துள்ளது. அந்த மனுவில் விசாரணை நடத்திய உயர் நீதி மன்ரம், செந்தில் பலாஜியின் மனுவை , 26-8-2020 அன்று, தள்ளுபடி செய்து, விசாரணை நீதி மன்றத்தில் வழக்கை எதிர் கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளது என்றும் சொன்னார்கள். ஆனால் செந்தில் பாலாஜியின் வக்கீல், 10 நாட்களுக்கு முன் உயர் நீதி மன்றம் செந்தில் பாலாஜி மற்றும் மூவர் மீது இருந்த வழக்கை விலக்கிக் கொள்ள உத்தரவு போட்டு விட்டதாக சொல்லி இருக்கிறார்.
1. சிறப்பு நீதி மன்றத்தில் விசாரணையில் உள்ள ஒரு வழக்கை, உயர் நீதி மன்றம் எப்படி விலக்கிக் கொள்ள உத்தரவிட முடியும்?
2. அப்படி ஒரு உத்தரவை உயர் நீதி மன்றம் 10 நாட்களுக்கு முன் போட்டிருந்தால், அந்த செய்தி எந்த ஊடகத்திலும் வராததற்கு என்ன காரணம்?
3. இது வரை உயர் நீதி மன்றத்தின் ஆணை ஏன் சிறப்பு நீதி மன்றத்துக்கு அனுப்பப் பட வில்லை?
4. அரசுப் பணியில் சேர உத்தரவு கொடுப்பதாக சொல்லி அமைச்சர் பெற்றதாக சொல்லப்படும் லஞ்சத்தை, வழக்கு என்று வந்தவுடன், திருப்பிக் கொடுத்து விட்டால், அதனை ஏற்று உயர் நீதி மன்றம், வழக்கை விலக்கிக் கொள்ளுமா?
5. நாளை இதனையே முன்னோடியாக எடுத்துக் கொண்டு, ஒரு திருடன், போலீஸ் தன் மீது வழக்கு போட்டதும், திருடியப் பொருளைத் திருப்பிக் கொடுத்து, வழக்கில் இருந்து வெளியேற முடியுமா?
அணிலால் தன் மீது சுமத்தப்பட்ட பழியை எதிர்த்துப் பேச முடிய வில்லை! ஆனால் உயர் நீதி மன்றம் “அணில்” அல்லவே! பேசும்!
ஒன்று மட்டும் நன்கு புரிகிறது. ஸ்டாலின் அமைச்சரவையில் எப்படிப்பட்ட யோக்கியர்கள் தமிழக மந்திரிகளாக இருக்கிறார்கள் என்பதற்கு பதமாக செந்தில் பாலாஜி ஒரு சோறு!
ஜெய் ஹிந்த்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...