Friday, August 6, 2021

தீப ஆராதனையின் தத்துவம்...

 கோவில்களில் பூஜையின் நிறைவாக ஹாரத்தி காட்டி வழிபடுவது வழக்கம்.

அதன் உண்மை தத்துவம் என்ன என்று
ஆராய்ந்தால் மெய்சிலிர்க்கும்.
அலங்காரம் முடிந்து முதலில் ஒன்பது திரியிட்ட தீப ஹாரத்தி காட்டப்படும்.
இது ஒன்பது கோள்களையும் வணங்கி
பின் அவைகளையே சாட்சியாக வைத்து காட்டப்படுவதன் அர்த்தம்.
அடுத்து எழு திரியிட்ட தீபம்.
இது மனித உடலுக்குள் உள்ள ஏழு ஆதாரங்களின் வழியாக பிரபஞ்ச பேராற்றல் உள் நுழைந்து சக்கரங்களை தூய்மை செய்ய வேண்டும் என்பதே இதன் அர்த்தம்.
அதற்கடுத்து ஐந்து முக தீபம்.
இது பஞ்ச பூதங்களை சாட்சியாக வைத்து ஐந்து புலன்களை நிர்வகித்தால் பழக்க பதிவுகளில் இருந்து விடுபட்டு விளக்க பதிவுகளுக்கு வர முடியும் என்பதன் விளக்கத்திற்கு தான்.
அடுத்து மூன்று முக தீப ஆராதனை.
மூன்று விதமான நிலைகளில் ஆணவம், கன்மம், மாயை, மனம் இயங்குவதால் மனதை ஆராய்ச்சி செய்து வேண்டியதை தக்க வைத்தும், வேண்டாததை அகற்றியும் வாழ்ந்தால் மனம மாசுகள் களையப்படும் என்பதன் தத்துவமே இந்த மூன்று முக தீப தரிசனம்.
அடுத்து இரண்டு முக விளக்கு.
இது இடகலை பிங்கலை நாடிகளை தூய்மை செய்தால் முன்னோர்கள் பதிவில் இருந்தும் விடப்பட முடியும் என்பதால் இந்த இரண்டு முக தீப தரிசனம்.
அடுத்து ஒரு முக தீப ஹாரத்தி.
இது இருப்பது ஒன்று தான். அந்த ஒன்றே பலவாகி தோற்றப் பொருளாகி இருக்கிறது. அனைத்தும், அனைவரும் ஒன்றே அன்றி வேறில்லை, என்பதை உணர்த்தும் கருத்து தான் தீப ஹாரத்தியின் தத்துவம்.
ஆனால்.....
அங்கே சென்று சண்டை இடுவதற்கோ,
இல்லை முந்திச் சென்று தீப ஹாரத்தி பார்ப்பதற்கோ,
இல்லை சிறப்பு தரிசனம் என்று
தனியாக அதிக பணம் ,செலுத்தி
அங்கேயும் நம்முடைய பண பலத்தை காட்டுவதற்கோ அல்ல.
உண்மையை உணர்ந்து உன்னதத்தை தெரிந்து, உத்தமாராய் வாழவே
முன்னோர்கள் ஒவ்வொரு சடங்கு முறைகளும் அமைத்துஇருக்கிறார்கள்.
அறிவோம் தெளிவோம்
சிந்தனையால் உயர்வோம்.
May be an image of fire

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...