மதுரை ஆதீன மடத்தின் புதிய பீடாதிபதியாக ஹரஹர ஞானசம்பந்த தேசிய பராமச்சாரிய சுவாமிகள் நேற்று பொறுப்பேற்றார்.
மதுரை ஆதீன மடத்தின் 292வது பீடாதிபதி அருணகிரிநாதர், 77 உடல்நலக் குறைவால் ஆக., 12ல் காலமானார். 2019 ஜூன் 6ல், ஹரஹர ஞானசம்பந்த தேசிய பராமச்சாரிய சுவாமிகள், இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டிருந்தார்.இவர் நேற்று, மதுரை ஆதீனத்தின் 293வது பீடாதிபதியாக பொறுப்பேற்றார். முன்னதாக, அருணகிரிநாதர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பூஜைகள் செய்தார்.
பின் மடத்திற்கு வந்தவருக்கு தருமபுரம், திருவாவடுதுறை ஆதீனங்கள், பதவியேற்பு நிகழ்ச்சியை நடத்தி வைத்தனர். இணை கமிஷனர்மீனாட்சி அம்மன் கோவில் இணை கமிஷனர் செல்லதுரை தலைமையில், ஆதீனங்களுக்கு மரியாதை செய்யப்பட்டது.புதிய ஆதீனம், மீனாட்சி கோவிலில் விடுபட்ட உஷகால கட்டளை நிறைவேற்றுதல், மடத்தில் அன்னதானம் வழங்குதல், மடத்திற்கு சொந்தமான நான்கு கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்துதல் உட்பட ஆறு உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.
ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உட்பட ஹிந்து அமைப்பின் நிர்வாகிகள் பங்கேற்றனர். மாலை 4:00 மணிக்கு மீனாட்சி கோவிலில் ஆதீனம் வழிபட்டார். பின், சித்திரை வீதிகளில் ஊர்வலமாக சென்றார்.
No comments:
Post a Comment