Saturday, August 7, 2021

சர்காரியார் கமிஷன் என்றால் என்ன?

 ஶ்ரீமான் ரஞ்சித் சிங் சர்க்காரியா என்பவர் பஞ்சாபில் 1916ல் பிறந்து தற்போது பாகிஸ்தானில் இருக்கும் லாகூர் அரசு கல்லூரியில் வழக்கறிஞர் பட்டம் பெற்றவர்.

1973ல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த சர்க்காரியாவை 1976இல் ஶ்ரீமான் கருணாநிதி மீதான ஊழல் புகார்களை விசாரிப்பதற்காக மத்திய அரசால் நியமிக்கப்பட்டார். 1971ல் திமுக மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அமைச்சரவையில் தனக்கு சுகாதாரத்துறை ஒதுக்கப்படாத வருத்தத்தில் இருந்த ஸ்ரீமான் எம்ஜிஆர் அவர்கள். திமுக கட்சியில் பொருளாளராக இருந்த காரணத்தால் 1972ல் திமுக மாநாடு பொதுக்கூட்ட மேடையில் வைத்து அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் 18000 கிளைக்கழக செயலாளர்கள் என அனைவரும் தங்கள் சொத்துக் கணக்குகளையும், தங்கள் குடும்பத்தினர் சொத்துக் கணக்குகளையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறினார் ஸ்ரீமான் எம்ஜிஆர். கட்சியில் அதிகமாக ஊழல் நடப்பதாக பொது வெளிகளில் மக்கள் பேசி வருவதால் பொதுமக்களின் சந்தேகத்தை போக்க இது உதவும் எனவும் கூறினார். இதனால் அதிரடியாக திமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
இதையடுத்து அதிமுக என்ற புதிய கட்சியை ஆரம்பித்த ஶ்ரீமான் எம்ஜி ஆர் அவர்கள் திமுக அமைச்சர்கள் மீது புகார் பட்டியலை தயாரித்து அதை பொதுமக்கள் புடைசூழ ஊர்வலமாக எடுத்துச் சென்று அன்றைய ஆளுநர் கே கே ஷா அவர்களிடம் அளித்தார். அதை அவர் பெற்றுக் கொள்ளாததால் அப்போதைய குடியரசுத் தலைவர் வி வி கிரி அவர்களை சந்தித்து நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் பட்டியலை நேரில் கொடுத்தார். அதனைப் பெற்றுக்கொண்ட ஆளுநர் கே கே ஷா அவர்கள் அப்போதைய பிரதமர் ஶ்ரீமதி இந்திரா காந்தி அவர்களுக்கு அனுப்பி கொடுத்தார். ஶ்ரீமதி இந்திரா காந்தி அவர்களும் அவற்றிற்கு தமிழக அரசிடம் விளக்கம் கேட்டார். அதற்கு அன்றைய முதல்வர் கருணாநிதி மத்திய அரசுக்கு விளக்கம் கொடுத்ததோடு அதை புத்தகமாக அச்சடித்து சட்டசபையில் வெளியிட்டார். ஆனால் அதை ஏற்றுக் கொள்ளாத ஶ்ரீமான் எம்ஜிஆர் அவர்கள் விசாரணை கமிஷன் அமைக்கப்படாமல் உண்மை வெளியே வராது என்று வலியுறுத்தினார். இந்த நேரத்தில்தான் இந்திராகாந்தி (1975 ஜூன் 25) எமர்ஜென்சியை நாடு முழுவதும் அமல்படுத்தினார் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. அதன்பிறகு தான் 1972ல் ஶ்ரீமான் எம்ஜிஆர் அவர்களால் கொடுக்கப்பட்ட ஊழல் புகார்கள் அனைத்திற்கும் 1976இல் உச்சநீதிமன்ற நீதிபதி ஶ்ரீமான் ரஞ்சித் சிங் சர்க்காரியா தலைமையில் தனி நபர் கமிஷன் அமைக்கப்பட்டது.
விசாரணை கமிஷன் கொடுத்த அறிக்கையில் சில.
வீராணம் ஏரியில் குழாய் அமைக்கும் பணியில் சத்தியநாராயணா பிரதர்ஸ் நிறுவனத்துக்கு சாதகமாக நடந்து கொண்டார் என்றும் இருபத்தொன்பது லட்சம் ரூபாய் ஏழு தவணைகளாக ஶ்ரீமான் கருணாநிதி பெற்றுக் கொண்டார் என்றும் சத்யநாராயணன் நிறுவனத்தை சேர்ந்த புருஷோத்தமன் அவர்களின் வாக்குமூலத்தின் மூலம் நிரூபித்தார் சர்க்காரியா.
ஏ எல் ஸ்ரீனிவாஸ் என்பவருக்கு மது ஆலை அமைக்க அனுமதி கொடுத்ததில் ஊழல். (திவாலான ஸ்ரீநிவாஸிடம் மதுஆலை அமைக்க இடம் கூட இல்லாத நிலையில் அனுமதி கொடுத்ததில் ஊழல் நடந்ததை கண்டுபிடித்தார் சர்க்காரியா)
மின்சாரத்துறை அமைச்சராக இருந்த ஓ பி ராமன் சமயநல்லூர் அனல் மின் நிலையம் அமைத்ததில் ஊழல்.
அன்பில் தர்மலிங்கம் அமைச்சர் பதவி ஏற்கும்போது செல்வந்தர் இல்லை. ஆனால் அமைச்சராக பதவியேற்ற பிறகு சுமார் 4 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் நிலங்களை வாங்கி சேர்த்துள்ளார் என்றும் பாடநூல்களை விநியோகிக்கும் புத்தக நிலையத்தில் பங்குதாரர் ஆனார் என்றும் உறுதிபடுத்தினார் சர்க்காரியா.
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை ஆலைகள் அளவுக்கதிகமாக சர்க்கரை இருப்பு வைத்திருந்ததாக வைத்திருந்ததால் குறிப்பிட்ட சர்க்கரை ஆலைகளுக்கு சலுகை காட்டுவதற்காக கருணாநிதியும் உணவுத்துறை அமைச்சர் பா வு சண்முகமும் சேர்ந்து சர்க்கரை ஆலை சங்கத்தலைவர் மூலம் 16 தவணைகளாக 13,21,296₹ பெற்றுள்ளார் இதற்காக தேசிய சர்க்கரை கொள்கையை மீறியுள்ளார் என்பதையும் அறிக்கையில் உறுதிபடுத்தினார் சர்க்காரியா.
இவ்வாறு பல ஊழல் குற்றச்சாட்டுகளை தனது விசாரணையின் மூலம் உண்மையென கண்டுபிடித்தார் சர்க்காரியா.
May be an image of 1 person, turban and text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...