1. *சீலிங் ஃபேனை* துடைக்கும் முன் காய்ந்த துணியில் முதலில் துடைத்து விட்டு பின்பு ஈர துணியில் துடைக்கவும்.இல்லையென்றால் தூசுக்கள் ஃபேன் முழுதும் அப்பிக்கொள்ளும்.
2. *லாப்டில்* உள்ள பொருட்களை எடுக்கும் பொது பொறுமையாக எடுக்கவும் கவனம் தவறினால் தலையில் விழ வாய்ப்புகள் அதிகம்.மண்ட பத்திரம்.
3. *சீலிங் ஃபேன்களை* ஆப் செய்து விட்டு ட்யுப் லைட்டுகளை துடைக்கவும்.இல்லையேல் இறக்கையில் சிரம்,கரம் பட்டு ரணம் ஆக நேரிடும்.
4. *ஒட்டடை* அடிக்கும் போது ஹெல்மெட் போட்டுக்கொண்டால் தூசு தும்புகள் கண்,வாய்,தலையில் விழாமல் தடுக்கலாம்.
5. இத்தனை வேலைகள் கஷ்டப்பட்டு செய்த பின்னால் *''என்ன கிளீன் பண்ணியிருக்கீங்க அங்கங்க அழுக்கு இருக்கு"* என்று ஒரு அசரீரி கேட்கும்.
அதை கேட்டு பொங்கி எழாமல் சட்டையை போட்டுகொண்டு அருகில் உள்ள பேக்கரிக்கு சென்று ஒரு கப் காபி சாப்பிடவும். அதனால் மேற்படி டேமேஜ் ஆகாமல் தவிர்க்கலாம். பாதுகாப்புடன் பொங்கலை கொண்டாடுவீர்.
No comments:
Post a Comment