இந்த கலியுகத்தில் கடன் வாங்கி வாங்கி நாம் எப்படி தான் கடன்காரர் ஆனோம் என்று நமக்கே தெரியாது. கலியுகத்திற்கும் கடனுக்கும் என்ன சம்பந்தம் என்று சில பேர் யோசிக்கலாம். இந்த கலியுகத்தில் தான் கடன் வேண்டாம் வேண்டாம் என்றாலும், கூப்பிட்டு கூப்பிட்டு லோன் தந்து மனிதர்களை கடனாளி ஆக்குகிறார்கள். கடனை வேண்டாம் என்று ஒருவன் முடிவு செய்து உட்கார்ந்து இருந்தாலும், வரக்கூடிய தொலைபேசி அழைப்புகள் அவனை எப்படியாவது கடனை வாங்க வைத்து விடுகிறது. இந்த மாய வலையில் எவன் ஒருவன் சிக்கிக் கொள்ளாமல் தப்பித்துக் கொள்கின்றானோ அவன் பிழைத்தான். கை நீட்டி லோன் வாங்கி விட்டால் வாழ்க்கையில் லோலோ வென அலைய வேண்டிய சூழ்நிலை. பார்த்து ஜாக்கிரதையா இருந்துக்கோங்க. இந்த விஷயங்களை எல்லாம் படிப்பது காமெடியாக இருக்கலாம். ஆனால் இதில் நிதர்சனமான உண்மை மறைந்திருக்கிறது. சரி, எப்படியோ நீங்கள் கடனாளி ஆகிட்டீங்க. அந்த கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறீர்கள். அதிலிருந்து வெளிவருவதற்கு இதோ ஆன்மீகம் சார்ந்த ஒரு 2 பரிகாரங்கள் உங்களுக்காக. கடன் கரைய விநாயகர் பரிகாரம்: இது ரொம்ப ரொம்ப எளிமையான பரிகாரம். ஏழு நிறங்களில், ஏழு நூல் வாங்கிக் கொள்ள வேண்டும். வர்ணம் உங்களுடைய விருப்பம் தான். அதில் கருப்பு நிற நூல் இருந்தாலும் தவறு கிடையாது. அந்த ஏழு நூலில் கொஞ்சம் தள்ளித்தள்ளி ஏழு முடிச்சு போட வேண்டும். ஏழு நூலை சேர்த்தது போல வைத்துக்கொண்டு, முடிச்சை போட்டுக் கொள்ளுங்கள். இப்போது ஏழு நூல் பிரியாது 7 நூலுக்கு நடுநடுவே முடிச்சுகள் இருக்கும் அல்லவா. அதை அப்படியே விநாயகர் கோவிலுக்கு கொண்டு செல்லுங்கள். குருக்களிடம் அந்த நூலைக் கொடுத்து விநாயகரின் பாதங்களில் வைத்துவிட்டு, உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த நூலோடு பிள்ளையாருக்கு அருகம்புல், வெற்றிலை பாக்கு, பூ, பழம் எல்லாம் வாங்கி செல்லுங்கள். குருக்கள் அர்ச்சனை செய்த அந்த கயிறைக் கொண்டு வந்து உங்களிடம் கொடுப்பார். விநாயகர் கோவிலிலேயே அமர்ந்து அந்த கயிறை எடுத்து உங்களுடைய கையில் கட்டுங்கள். கயிறில் முடிச்சு போடும்போதும் சரி, கயிறை உங்கள் கையில் கட்டிக் கொள்ளும் போதும் சரி, கடன் உங்களை விட்டு சீக்கிரம் விலக வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். நிச்சயம் நல்லது நடக்கும். தடைகள் விலகும். கடனை அடைக்கும் கொள்ளு பரிகாரம்: கடனை அடைக்க இன்னொரு சுலபமான பரிகாரமும் உள்ளது. இந்த பரிகாரத்திற்கு நமக்கு கொள்ளு தானியம் தேவை. ஒரு கைப்பிடி அளவு கொள்ளு எடுத்து ஒரு பேப்பரில் வைத்து மடித்து கொள்ளுங்கள். இதை நீங்கள் விநாயகர் கோவிலுக்கு செல்லும்போது கையோடு எடுத்துச் செல்ல வேண்டும். விநாயகருக்கு முன்பு கடன் தீர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொண்டு, இந்த ஒரு கைப்பிடிக் கொள்ளை, உங்களுடைய கையில் எடுத்துக் கொண்டு தலையை மூன்று முறை சுற்ற வேண்டும். கொள்ளை பேப்பரில் வைத்து மடித்து மீண்டும் வீட்டிற்க்கே கொண்டு வாருங்கள். இதை ஓடுகின்ற தண்ணீரில் முடிந்தால் விட்டுவிடலாம். அப்படி இல்லை என்றால் காக்கை குருவிகளுக்கு இரையாக வைக்கலாம். அப்படி இல்லை என்றால் பசு மாட்டிற்கு சாப்பிட கொடுத்து விடலாம். வாரம் தோறும் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமையில் எமகண்டத்தில் இந்த பரிகாரம் செய்வது நல்ல பலனை கொடுக்கும். ஜாதக கட்டத்தில் கேதுவால் பிரச்சனைகள் இருந்தால் தான் கடன் பிரச்சனை கஷ்டங்கள் அதிகரிக்கும். கேதுவுக்கு உண்டான தானியம் கொள்ளு. ராகு கேதுவால் பிரச்சனைகள் இருந்தால் விநாயகரை வழிபாடு செய்யும்போது அது நமக்கு பெரிய அளவில் பாதிப்பை கொடுக்காது. அதனால்தான் விநாயகர் கோவிலுக்கு சென்று இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த இரண்டு பரிகாரங்களில் ஏதாவது ஒன்றை மட்டும் தனியாகவும் செய்யலாம். அல்லது இரண்டு பரிகாரங்களை சேர்த்து செய்யலாம். அது உங்களுடைய விருப்பம். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன பரிகாரங்களை செய்து பலன் பெறலாம் என்ற கருதோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
ஒருபுறம் நடிகர் கார்த்திக் கலாய்க்க, மறுபுறம் குஷ்பு சதாய்க்க, ஜி.கே வாசனை மாற்று போல உசுப்பேற்றுகின்றன தமிழக ஊடகங்கள்! “ கு ஷ்புவை தூ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment