Tuesday, April 11, 2023

இதைத் தான் நல்லதுக்கே காலம் இல்லை என்கிறார்களோ ...

 இது ஒரு உண்மைச் சம்பவம்! வருடம் கூட நினைவில் இருக்கின்றது!

பூசாரி கீழிருந்து அர்ச்சனை தட்டுகளை வாங்கி மேலே கொண்டு சென்று தேங்காய் பழம் உடைத்து விட்டு மாலை அணிவித்து அதற்கு பதிலாக வேறொரு மாலையோ, பூச்சரமோ திருப்பிக் கொடுப்பது வழக்கம்.
அன்று தேங்காய் அர்ச்சனை தட்டு வாங்கிய பெண்மணி ஒருவர் பிரகாரம் சுற்றி வரும் சமயம் பூசாரியை குறை சொல்லிக் கொண்டிருந்தார். தேங்காய் மாற்றி வைத்துவிட்டார்! நல்ல பெரிய தேங்காயை அர்ச்சனைத்தட்டில் மாற்றி வைத்துவிட்டார். இது என்ன பழக்கமோ ? தெரியவில்லை! இதில் என்ன கிடைக்கிறது என்று தெரியவில்லை?என்று ஒவ்வோரிடமும் காண்பித்து காண்பித்து புலம்பல்.
எனக்கு வருத்தம் மட்டுமல்ல. சிறிது சந்தேகமும் கூட. ஒருவேளை செய்திருப்பாரோ? அல்லது ஒரு தேங்காயை மாற்றி வைத்து அவருக்கு என்ன கிடைத்து விடுகிறது? என்று அன்று பொழுதுமே அதே சிந்தனை.
மறுநாள் காலை விசேஷதினமில்லை.கூட்டமுமில்லை.அப்போது மனம் பொறுக்காமல் இது பற்றி கேட்டேன்.
அவர் சிரித்துக் கொண்டு மேலே சென்று மூன்று தேங்காய் எடுத்து வந்தார். என்னிடம் காண்பித்து எப்போதுமே இரண்டு அல்லது மூன்று தேங்காய் வைத்திருப்பேன்! இது தினமும் புதிதாக மாற்றி வைத்துக் கொள்வேன். யாருக்காவது தேங்காய் அழுகல் இருந்தால் அவர்கள் மனதளவில் வருத்தப்படுவார்கள் என்று அவர்கள் கவனிக்குமுன்னர் லேசாக மறைத்து தேங்காய் மாற்றி நல்ல தேங்காயை வைத்து விடுவேன்! நேற்று நடந்ததும் அப்படித்தான்! என்று கையை பிடித்து இழுத்து குப்பைகளை சேகரிக்கும் கூடையில் இருந்து எடுத்துக் காண்பித்தார். அங்கே நேற்றைய தினம் உடைத்த அழுகிய தேங்காய்.
கண்ணால் காண்பதும் பொய்! காதால் கேட்பதும் பொய்! தீர விசாரித்து அறிவது மெய் ! என்று தெரிந்து கொண்டேன்.
எனவே இதெல்லாம் தற்செயல் தானே ஒழிய இதில் மன வருத்தப்படும்படி ஒன்றும் இல்லை என்பது என் எண்ணம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...