Thursday, April 13, 2023

'ஆன்லைன் ரம்மி' தடைச் சட்டத்தின் தலைவிதி இப்படி ஆகலாம்.

 

1. இந்த விளையாட்டை நடத்தும் குழுக்கள், நிறுவனங்கள் நிச்சயமாக நீதிமன்றங்களுக்குச் செல்வார்கள் எனத் தெரிகிறது. ஏற்கனவே இது குறித்த ஒரு வழக்கு நிலுவையில் இருக்கிறது.

2. சில மாநிலங்களின் உயர்நீதிமன்றங்கள், அந்தந்த மாநில அரசுகள் இது போன்றதொரு தடைச் சட்டத்தை அங்கே கொணர்ந்த போது, அந்தச் சட்டமே செல்லாது என்று கூறி, தடையை ரத்து செய்து விட்டன.

3. மத்திய அரசே தலையிட்டு இத்தகைய தடைச் சட்டத்தைப் பிறப்பித்தாலும், உச்ச நீதிமன்றம் அதனை ஏற்றுக் கொள்ளுமா என்பதும் மிகப் பெரிய கேள்விக் குறியே.

4. ஏற்கனவே ஒரு சில தீர்ப்புகளில், ரம்மி விளையாட்டை 'அறிவுத் திறனை அடிப்படையாகக் கொண்ட விளையாட்டு' (Game of Skill) என்றும், அது 'அதிர்ஷ்டத்தை வைத்து நடக்கும் விளையாட்டு அல்ல' (Not a Game of Chance) என்றும் உச்ச நீதிமன்றம் சொல்லி இருப்பது பலருக்கும் தெரிந்திருக்கும்.

5. ஆகவே, மீண்டும் 'பழைய குருடி, கதவைத் திறடி' கதை தான்.

6. அப்போது தி.மு.க. அரசு, நீதிமன்றங்களின் பேரில் பழியைப் போட்டுத் தப்பி ஓடி விடும்.

7. அன்றைக்கு, அச்சு ஊடகங்களும், காட்சி ஊடகங்களும், சமூக ஊடகங்களும், எல்லாவற்றையும் பொத்திக் கொண்டு, அமைதி ஆகி விடுவார்கள்.

அப்படி எல்லாம் நடந்தால், என்ன தான் செய்ய முடியும்?

அப்படிக் கேளுங்கள், சொல்கிறேன்.

1. தடைச் சட்டத்துக்குப் பதில், 'ஒழுங்குபடுத்தும் சட்டம்' (Regulatory Act) கொண்டு வரலாம்.

2. விளையாடுபவரின் வயது, 18-க்கு மேல் 80-க்குள் இருக்க வேண்டும்.

3. விளையாடுபவர் ஒவ்வொருவரின் கணக்கையும், அவருடைய வங்கிக் கணக்கோடும், ஆதார் எண்ணோடும் கண்டிப்பாக இணைக்க வேண்டும்.

4. பந்தயப் பணத்தை (Stakes) வெகுவாகக் குறைக்கலாம். உச்ச பட்ச தொகையையும் (Ceiling) நிர்ணயம் செய்யலாம்.

5. தோற்பவர்கள் ஒவ்வொரு புள்ளிக்கும் (Point), 1 காசு முதல் 5 காசுகள் வரை தான் பந்தயம் வைத்து விளையாடலாம் என்று அறிவிக்க வேண்டும்.

6. அதிக பட்சமாக ஒரு சுற்றுக்கு (One Round), மொத்தப் பந்தயத் தொகை 2 ரூபாயைத் தாண்டக் கூடாது என்று அறிவிக்க வேண்டும்.

7. வெல்வதற்கும், தோற்பதற்குமான ஒருவருடைய ஒரு நாளைய உச்ச வரம்பு, ரூபாய் 20-ஐத் தாண்டக் கூடாது.

8. ஒருவர், ஒரு நாளைக்கு 10 சுற்றுக்களுக்கு மேல் ஆட முடியாது என்று தீர்மானிக்க வேண்டும்.

9. ஒருவர் ஒரு நாளைக்கு, (இந்த விளையாட்டை நடத்தும்) இரண்டு இணைய தளங்களுக்கும் மேலாக உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்படும்.

10. இந்த விளையாட்டுகள் குறித்துத் தேவையான விதிமுறைகளை வகுக்கவும், அவற்றைத் திருத்தவும், மத்திய அரசு ஓர் அதிகார ஆணையத்தை (Authority) நியமிக்கும்.

11. அந்த விரிவான விதிமுறைகளை 3 மாதங்களுக்கு ஒரு தடவை அந்த ஆணையத்தின் இணையதளத்தில் தவறாமல் வெளியிட வேண்டும்.

12. அந்த ஆணையத்தில், நீதித் துறை, மத்திய தகவல் & ஒளிபரப்புத் துறை, விஞ்ஞானம் & தொழில்நுட்பத் துறை, விளையாட்டுத் துறை, பொருளாதாரக் குற்றப் புலனாய்வுத் துறை ஆகிய துறைகளில் இருந்து தலா ஒருவர் உறுப்பினராக இருப்பார்கள்.

13. அந்த ஆணையமே, இது தொடர்பாக எழும் அனைத்துப் புகார்களையும் விசாரித்துத் தகுந்த முடிவெடுக்கும்.

14.இது குறித்த வழக்குகளை, மாவட்ட நீதிமன்றங்களும் (District Sessions Court), அவற்றுக்கு மேலே உள்ள நீதிமன்றங்களும் (High Courts & Supreme Court) தான் விசாரிக்கும்.

15. வழக்குகளுக்கு மேல் முறையீடு வசதி (Appeal Provision) உண்டு.

16. ஒரே விதமான தீர்ப்பு, 3 வெவ்வேறு நீதிமன்றங்களால் வழங்கப்பட்டால், அதற்கப்புறம் மேல் முறையீடு செய்ய வழி இல்லை.

17. இது சம்பந்தமான இறுதியான முடிவு, உச்ச நீதிமன்றத்தின் கையில் தான் இருக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...