Sunday, April 16, 2023

மோட்டார் சுந்தரம் பிள்ளை .

1966இல் வந்த படம்.
ஒரு சாந்தமான, அன்பான (பெரிய) குடும்பத் தலைவன். 9 குழந்தைகள். கதையின் ஆரம்பத்தில் சௌகார் மீண்டும் கர்ப்பம் வேறு. பெரிய பணக்காரர். பட்டணத்தில் ஃபாக்டரி. ஒரு சிறு நகரத்தில் (காலேஜ் எல்லாம் இருக்கிறது) குடும்பம். வார இறுதியில் மட்டும் வீட்டுக்கு வருவார்.
அவரது வரவை எதிர்பார்த்திருக்கும் பிள்ளைகள். கொஞ்சம் அசடான அக்கா பையன் தான் வீட்டின் ஆண் பிள்ளை. திருமணமாகி இன்னும் கணவன் வீட்டுக்கு போகாத முதல் பெண் காஞ்சனா.
காலேஜில் படிக்கும் இரண்டு பெண்கள், அதில் ஒன்று ஜெ. (ஜெ வேறு எந்தப் படத்திலாவது சிவாஜிக்கு மகளாக நடித்திருக்கிறாரா?) அவர்கள் இருவருக்கும் காதல். ஜெ காதலிப்பது லோகல் காலேஜ் ப்ரின்சிபல் மகன் ரவிச்சந்திரனை.
இரண்டாவது பெண் ஸ்டேஷன் மாஸ்டர் பையனான காலேஜ் ப்ரொஃபஸரை காதலிக்கிறாள். காதலுக்கு பச்சை கொடி காட்டும் குடும்பங்கள்.
நிச்சயதார்த்தத்தின்போது சிவாஜிக்கு இன்னொரு மனைவியும் குடும்பமும் இருப்பது தெரியவருகிறது. ஊர் பெரிய மனிதனுக்கு இருக்கும் ஒழுக்க குறைவால் ஷாக்காகும் எல்லாரும் நிச்சயதார்த்தத்தை நிறுத்திவிட,
சௌகார் கிடைத்தது சான்ஸ் என்று அழ ஆரம்பிக்க, கடைசியில் சிவாஜி சௌகாரின் தங்கை மணிமாலாவைத்தான் சௌகார் இறந்துவிட்டார் என்று நினத்து கல்யாணம் பண்ணிக்கொண்டது தெரிகிறது.
இரண்டு குடும்பங்களும் ஒன்று சேர்ந்து, நின்று போன கல்யாணங்கள் நடக்க, சுபம்!
சிவாஜிகணேசன் சௌகார் ஜானகி, மணிமாலா, ஜெயலலிதா, காஞ்சனா, சிவகுமார், ரவிச்சந்திரன், நாகேஷ்,
எஸ். ராமாராவ், மேஜர் சுந்தரராஜன், நாகையா, சச்சு என்று ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிறது. இசை எம்எஸ்வி.
நாகேஷின் நகைச்சுவை பகுதி துப்பறியும் சாம்புவிலிருந்து inspire ஆனது. சாம்புவைப் போலவே இவரும் ஏதாவது செய்யப் போய் திருடர்கள் அகப்பட்டுக்கொள்வார்கள். சிரிக்கும்படி இருந்தது
🌹“மனமே முருகனின் மயில்வாகனம்”தான். பாடியது ராதா ஜெயலக்ஷ்மி. எழுதியது பத்மஸ்ரீ கொத்தமங்கலம் சுப்பு. கொத்தமங்கலம் சுப்பு
🌹குபுகுபு நான் எஞ்சின்” ஒரு துள்ளலான பாட்டு. ஏ.எல். ராகவனின் கலக்கலான குரல் நாகேஷுக்கு
🌹துள்ளி துள்ளி விளையாட துடிக்குது மனசு” சுசீலா, எல்.ஆர். ஈஸ்வரி, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி இணைந்து பாடும் ஒரு நல்ல பாட்டு.
🌹காத்திருந்த கண்களே” பி.பி. ஸ்ரீனிவாசும், சுசீலாவும் பாடிய இனிமையான பாட்டு. ரவிசந்திரனும், ஜெயும் சாத்தனூர் அணைக்கட்டில் பாடுவார்கள்
May be an image of 3 people
All reaction

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...