Sunday, April 16, 2023

*தேய்பிறைஅஷ்டமி !

 அஷ்டலட்சுமிகளும் வணங்கும் தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு!

சிவபெருமானின் திருக்கோலங்களில் பைரவர் திருக்கோலமும் ஒன்று. பைரவர், எட்டு மற்றும் அறுபத்து நான்கு என்ற வகையில் அருள் புரிகிறார். ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி திதி பைரவருக்கு உகந்த நாள். அந்த வகையில் ஒவ்வொரு அஷ்டமி திதிக்கும் ஒரு பெயர் உண்டு. இதில் கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி ருத்ராஷ்டமி என்றும் காலபைரவாஷ்டமி என்றும் சொல்லப்படுகிறது.
ஒவ்வொரு சிவன் கோவிலி லும் வடகிழக்குப் பகுதியில் தனிச்சந்நிதியில் காலபைர வர் எழுந்தருளி இருப்பார். சில கோவில்களில் சூரியன், பைரவர், சனி பகவான் என்ற வரிசையில் காட்சி தருவதும் உண்டு. சிவபெருமான் வீரச் செயல்களைச் செய்யும் காலங்களில் ஏற்கும் திருவுரு வங்களை பைரவர்
திருக்கோலம் என்று புராணம் சொல்லும்.
பைரவரின் திருவுருவத்தில் பன்னிரெண்டு ராசிகளும் அடக்கமாகியுள்ளன.
தலையில் மேஷ ராசியும்,
வாய்ப் பகுதியில் ரிஷபராசி யும், கைகளில் மிதுனமும் , மார்பில் கடகமும்,வயிற்றுப் பகுதியில் சிம்மமும், இடையில் கன்னியும்,
புட்டத்தில் துலாமும், லிங்கத்தில் விருச்சிகமும், தொடையில் தனுசும்,
முழந்தாளில் மகரமும், காலின் கீழ்ப்பகுதியில் கும்பமும்,அடித்தளங்களில் மீன ராசியும்,அமைந்துள்ள தாக ஜாதக நூல்கள் கூறுகின்றன.
தேய்பிறை அஷ்டமி வழிபாடு.
இழந்த செல்வங்களை மீண்டும் பெறவும் தொழிலில் வளர்ச்சி காணவும் குடும்பத் தில் மகிழ்ச்சி, நிலவவும் செல்வ செழிப்போடு வாழ வும் தேய்பிறை அஷ்டமி யன்று பைரவர் வழிபாடு செய்ய வேண்டும். தற்போதைய கால கட்டத்தில் நமக்கு செல்வ வளங்களை வழங்குவதற்கும் நம்மை நல்லவிதமாக வழிகாட்டி வாழவைப்பதற்கும் பைரவர் வழிபாடு மிக முக்கியமானது.
ஆகவே தேய்பிறை அஷ்டமி யில் இவரை வணங்குவது மிகச் சாலச் சிறந்தது. ஏனெனில் காலபைரவரை அன்று அஷ்டலட்சுமிகளும் வணங்குவதால் வணங்கு பவருக்கு அனைத்து நலன்க ளும் கிட்டும் என்பதில் எள்ள ளவும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. நாமும் அதே தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபட,அஷ்ட லட்சுமிகளின் ஆசியும், பைர வரின் வரங்களும் ஒருங்கி ணைந்து கிடைத்துவிடும். நேர்மையான வழியில் செல்வச் செழிப்பை அடைய உதவுவதே ஸ்ரீசொர்ண ஆகர்ஷணபைரவர் வழிபாடு ஆகும்.
ஒவ்வொரு தமிழ் மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி நாளன்று நம் ஒவ்வொரு வருக்கும் செல்வச் செழிப்பை அள்ளித்தரும் அஷ்ட லட்சுமி களும் பூமியில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிக்கு வந்து அவரை வழிபடுகின்றனர். அப்படி வழிபடக் காரணம் , பூமியில் வாழும் கோடானு கோடி மனிதர்களுக்கும் அஷ்ட லட்சுமிகள் செல்வச் செழிப்பை தினமும் அள்ளித் தருவதால்,அவர்களில் “செல்வ வளசக்தி” குறைகிறது; அந்த செல்வ வள சக்தியை அதிகமாகப் பெறுவதற்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவ ரை வழிபட வருகின்ற னர் .அதே தேய்பிறை அஷ்டமி நாளில் வரும் ராகு காலத்தில் நாமும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டால், செல்வத்தின் பிரபஞ்ச அதிபதியை வழிபட்ட புண்ணியம்கிடைக்கும். அதனால்,நமது ஏழு ஜன்மங் கள் மற்றும் ஏழு தலைமுறை முன்னோர்களில் பாவ வினைகள் தீரத்துவங்கும்; அப்படி பாவ வினைகள் தீரத்துவங்கிய மறு நொடியே நமது செல்வச் செழிப்பும் அதிகரிக்கத் துவங்கும்.
ராகு கால நேரத்தில் ஸ்ரீசொர்ண பைரவரின் சன்னதியில் அவரது மூல மந்திரத்தை 330 தடவை ஜபிக்க வேண்டும்.அவ்வாறு ஜபித்தால்,வர வேண்டிய பணம் வந்துவிடும். தர வேண்டிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் சூழ்நிலை உருவாகி விடும்; எவ்வளவு பெரிய கடன்களாக இருந்தாலும் தீர்ந்துவிடும்.
வயதானவர்களுக்கு நோயினால் உண்டான உபாதைகள் தீரும், வலியும் , வேதனையும் பெருமளவு குறையும். சனியின் தாக்கம் (ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி) தீரும். வேலை பார்ப்பவர்களுக்கு சம்பள உயர்வு உண்டாகும்; தொழில் செய்ப வர்களுக்கு வருமான அளவு அதிகரித்துக்
கொண்டே செல்லும்.நமது கடுமையான கர்மவினைகள் தீரத்துவங்கும்
கஷ்டங்ளை போக்கும் பைரவ காயத்ரி மந்திரம்:
ஓம் ஷ்வானத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ பைரவ ப்ரசோதயாத்.
இந்த காயத்ரியை அஷ்டமி
வழிபாடு தினத்தில் 108 முறை சொல்லலாம்.
ஸ்லோகம்:
ஓம் கால காலாய வித்மஹே!
காலஹஸ்தாய தீமஹி
தன்னோ கால பைரவ ப்ரச்சோதயாத் !
நன்றி
இனியகாலைவணக்கம்
வாழ்கவளமுடன்🙏🌹
No photo description available.
All react

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...