**கோடி கோடியாய் கடன் வைத்திருந்தாலும் கவலைப்படாமல் மகா பெரியவா சொன்ன இந்த பரிகாரத்தை கேளுங்களேன். கடன் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகும்.**
எவ்வளவு பெரிய கஷ்டத்திற்கும் மிக மிக சுலபமான தீர்வை கொடுக்கக் கூடிய மகா சக்தியை கொண்டவர் தான் மகா பெரியவா. இந்த மகா பெரியவா சொன்ன பரிகாரங்களை செய்து பலன் அடைந்தவர்கள் ஏராளமானோர். அப்படி ஒரு பக்தனுடைய கதையைத்தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். மகா பெரியவாவை பார்ப்பதற்கு ஏராளமான பக்தர்கள் மடத்திற்கு வருகை தருவார்கள். நிறைய கூட்டம் இருக்கும். அந்த வரிசையில் ஒரு பக்தன் கண்களில் கண்ணீரோடு முகத்தில் வாட்டதோடு வந்து மகா பெரியவா அவர்களைப் பார்த்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு, குங்குமத்தை பிரசாதமாகவும் வாங்கிக் கொண்டு செல்கின்றான்.
இதேபோல மூன்று நாட்களும் நகர்ந்து சென்றது. மூன்று நாட்களும் மகா பெரியவா, கஷ்டத்தில் வந்த அந்த ஒரு பக்தனை கவனித்துள்ளார். நான்காவது நாளும் அந்த பக்தன் கஷ்டத்தோடு வந்து, சொல்ல வந்த கஷ்டத்தை சொல்லாமல் பிரசாதத்தை வாங்கிக் கொண்டு மஹா பெரியவாவை கடந்து சென்ற போது, மகா பெரியவா அந்த பக்தனின் கைபிடித்து இழுத்து, கூப்பிட்டு ‘சொல்ல வந்த கஷ்டத்தை ஏன் சொல்லாமல் செல்கிறாய்’ என்று கேட்டபோது, பின்பு கண்கலங்கி கஷ்டத்தை அப்படியே சொல்லத் தொடங்கினான் அந்த பக்தன்.
‘தீர்க்கவே முடியாத பணக்கஷ்டம். அள்ளி அள்ளிக் கொடுத்த எங்களுடைய குடும்பம் இப்போது கிள்ளி கொடுப்பதற்கு கூட எதுவும் இல்லாமல் நிற்கின்றது. அன்றாட வாழ்க்கையை நடத்திச் செல்ல முடியாத எனக்கு கோடி கோடியாக இருக்கும் கடனை அடைப்பதற்கான வழியே தெரியவில்லை. என்ன செய்வது என்றே புரியவில்லை’. என்றவாறு கஷ்டத்தோடு கண்கலங்க பிரச்சனைகளை கொட்டி தீர்த்தார் அந்த பக்தன்.
எல்லா பிரச்சனைகளையும் பொறுமையாக கேட்டுக் கொண்ட மகா பெரியவா கஷ்டத்தில் வந்த அந்த பக்தனை பார்த்து, ‘உன்னுடைய வீட்டில் ஒரு கிணறு இருக்கிறது அல்லவா? அந்த கிணறில் நிரம்ப தண்ணீர் இருக்கிறது அல்லவா? என்று கேட்கின்றார்’. இவருடைய கஷ்டத்திற்கும் கிணற்றில் இருக்கும் தண்ணீருக்கும் என்ன சம்பந்தம் என்று அங்கு உள்ளவர்களும் யோசிக்க தொடங்கி விட்டார்கள். இருந்தாலும் மகா பெரியவா சொல்கின்ற விஷயத்தை செவிகொடுத்து கேட்க வேண்டும். அதுதானே மரியாதை. அதுதானே பக்தி.
என்னுடைய வீட்டில் கிணறு இருக்கிறது அது நிரம்ப இளநீர் போல சுவையான தண்ணீரும் இருக்கிறது என்று சொல்கிறான் அந்த பக்தன். ‘இன்னும் ஒரு சில நாட்களில் ஆடி மாதம் வரப்போகின்றது. பக்தர்கள் கோவிலுக்கு திரளாக செல்வார்கள். வெயில் சமயம் என்பதால் பக்தர்களுக்கு உதவியாக இருக்கும் வகையில், உன் கிணற்றில் இருந்தே தண்ணீர் எடுத்து பாதை முழுவதும் தண்ணீர் பந்தல் அமைத்து விடு. தண்ணீர் பந்தல் அமைக்கும் போது பானையில் தண்ணீர் நிரப்பும்போது ஹரே கிருஷ்ணா! ஹரே ராம! மந்திரத்தை மனதார உச்சரித்துக் கொண்டே இரு.’ என்று ஒரு பரிகாரத்தை சொல்கிறார் மகா பெரியவா.
பக்தனும் இதைக் கேட்டுக் கொண்டு மகா பெரியவா சொன்னது போலவே பரிகாரத்தை செய்து விட்டான். தாகத்தில் வந்த பக்தர்களுக்கு தண்ணீரும் கிடைத்தது. இந்த பரிகாரம் செய்து முடித்த ஒரு சில நாட்களிலேயே பக்தனின் சொந்த ஊரான அந்த கிராமத்திலிருந்து ஒரு செய்தி வருகின்றது. ஏதோ ஒரு பூர்வீக சொத்து பத்திரம் பக்தனின் தாத்தா பெயரில் உள்ளது.
அந்த சொத்தை விற்றால் ஒரு பெரிய தொகை கிடைக்கும் என்ற ஒரு செய்தி. அந்த பக்தனும் சொத்து விவகாரங்களை சரியாக முடித்து சொத்தை விற்று கைக்கு வந்த பணத்தை கடனாளிகளுக்கு திருப்பி கொடுத்துவிட்டான். போக மீதம் ஒரு சிறு தொகையும் இவனுடைய கையில் இருப்பு இருந்தது. பாருங்கள் எவ்வளவு அற்புதமான பரிகாரம். ஒரு தண்ணீரை தானமாக கொடுத்ததற்கே இவனுடைய தீரா பரம்பரை கடன் தீர்த்து விட்டது. மகா பெரியவாரிவா அவர்கள் நிகழ்த்திய பல அற்புதங்களில் இதுவும் ஒன்று. நமக்கு எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் சரி, நம்மிடம் இருக்கக்கூடிய பொருளை அந்த இறைவனின் பெயரைச் சொல்லி தானமாக கொடுக்த்து அடுத்தவர்களுக்கு உதவும் போது போது, நம் கஷ்டம் தீருவதற்கு ஏதாவது ஒரு வழியை அந்த இறைவன் நமக்கு கொடுப்பான். நீங்களும் இதை பின்பற்றித்தான் பாருங்களேன்.
No comments:
Post a Comment