கஷ்டப்பட கூடாது என்று நினைப்பவனே கஷ்டப்படுகிறான் !!
சரிதானே இதில் என்ன தவறு இருக்கின்றது !! அவன் விருப்பமே நிறைவேறுகிறது இறையால் ..
அவன் முன்னிறுத்துவது கஷ்டத்தை என்பதால் !!
அதனோடு உணர்வாய் வாழ்ந்து ..
அப்படி இருக்க கூடாது என்று வெளியே சொன்னாலும் ..
அவன் மனதின் ஆழம் எதை அடிப்படையாக பற்றி இருக்கின்றது என்று பார்த்தால் அது கஷ்டம் என்ற ஒன்றை தானே பற்றி இருக்கு ..
அதுவே
ஆனந்தமாக இருக்கணும் !! இன்பமாய் வாழனும் !! என்று எண்ணினால் ..
அவன் மனம் ஆனந்த உணர்வே மேலோங்கி !! ஆனந்தமாய் எப்படி வாழலாம் என்று மனசிகமாக வாழ்ந்து பார்த்து !! ஆனந்தம் என்ற ஒன்றில் நிலைகொண்டு இருக்க ..
வெளியே அனுபவிப்பது பிறர் பார்வைக்கு கஷ்டமாக தெரிந்தால் கூட இவன் அதை ஆனந்தமாகவே அனுபவிப்பான் !!
சொல்லும் முன்னே சிந்தையில் அப்படி வாழ்ந்து விட்டு தான் சொல்கிறோம் !!
அதுவும் அந்த உணர்வோடு லயித்து விடுகிறோம் ..
அப்போது அந்த உணர்வோடு எழும் எண்ணம் அதன் தாக்கத்தையே கொண்டு வந்து சேர்க்கும் நம் இறையின் கருணையால் ..
எண்ண தெரிந்து கொள்வோம் !!
எண்ணியவாறு ஈடற்றும் இறையின் கருணையால் ..
திருச்சிற்றம்பலம்
நடராஜா நடராஜா

No comments:
Post a Comment