☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
☘️எழுந்து நில் , இமயம் நீயே!
☘️இமை திறந்தால்தான் காட்சிகள் தெரியும்,
சுமை அறிந்தால்தான் வலி புரியும்,
அறிவு ஒன்றால்தான் ஆற்றல் விரியும்,
தன்னம்பிக்கை இருந்தால்தான் வெற்றியில் முடியும்..!
☘️முயற்சியில் தேனியாய் வலம் வந்திடு,
உழைத்தால் உயர்வு வரும் நம்பிடு,
உண்மையும் நேர்மையும் உடன் வைத்திடு,
நம்பிக்கை கொண்டே நிம்மதி அடைந்திடு..!
☘️உறக்கத்தின் கனவுகளில் உயர்வடைய எண்ணாதே,
உழைப்பினில் என்றும் சோர்வு கொள்ளாதே,
தோல்வியில் வாழ்வு முடிந்ததென்று புலம்பாதே,
தேடுதலில் கிடைத்திடும் மனம் வருந்தாதே..!
☘️ஏறெடுத்துப் பார்த்தால் இமயம் மேலே,
ஏறி நின்றால் காலுக்கு கீழே,
எழுந்து வா மனிதா ..
துணிந்து செல் வெற்றி உனதே..!
உங்கள் வாழ்க்கையில் வருபவர்களை ஏற்றுக் கொள்பவராக இருங்கள். செல்பவர்களிடம் விடை பெற்று கொள்ளுங்கள். என்றும் துக்கப்படமாட்டீர்கள்.
இந்த உலகம் பல வலிகளைத் தரும் தாங்கிக்கொள்ளுங்கள். அவ்வப்போது சந்தோசங்களையும் தரும் அனுபவித்துக்கொள்ளுங்கள்.
இந்த உலகம் உங்களுக்கு பாடம் கற்பிக்க எதிர்பாராத துரோகத்தை தரும் அதை உணர்ந்து, கற்றுக் கொள்ளுங்கள்.
மகிழ்ச்சி சிரித்து வாழ வைக்கும். துன்பம் உங்களை சிந்தித்து வாழ வைக்கும்.
☘️இனிய காலை வணக்கம்🙏🏻
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
No comments:
Post a Comment