திமுக ஆரம்பிக்கபட்ட போது அதன் முன்னணி தலைவர்கள் ஐந்து பேர், அண்ணாத்துரை,
இந்த ஐந்துபேர் வரிசையில் கருணாநிதி இல்லை
அவர் அடுத்த வரிசையான சி.பி சிற்றரசு வரிசையில் இருந்தார், சிற்றரசின் இயற்பெயர் சின்னராஜ் ஆனால் தமிழனாக தன்னை சிற்றரசு என அறிவித்துகொண்டார்
அக்காலத்தில் திமுகவினர் சுமார் 20 இதழ்களை நடத்தினர், அதில் ஒன்றுதான் "முரசொலி"
அது போக ஏகபட்ட இதழ்கள் இருந்தன, "தீப்பொறி", "இனமுழக்கம்" "தீசுடர்" ஆகிய பத்திரிகையினை நடத்தினார்
அக்காலத்தில் அதாவது 1950ல் முரசொலி இன்று போலவே கருணாநிதியின் சொத்தாக இருந்தது, கட்சியின் ஏராக "நம் நாடு" பத்திரிகைதான் இருந்தது
அதுதன கட்சி பத்திரிகை அதைத்தான் சிற்றரசு ஆசிரியராக நடத்தினார்
25 நாவல்கள் எழுதினார், அதனை உலக தரத்தில் எழுதினார், திராவிட கொள்கைபடி தமிழ் புராணங்கள் இந்து இலக்கியங்களை தொட கூடாது என்பதற்காக ஐரோப்பிய கதைகள் அத்தனையும் எழுதினார்
அது என்னவோ தெரியவில்லை அக்கால திமுகவினருக்கு பத்திரிகை தொடங்க காசு வந்திருக்கின்றது, ஐரோப்ப்பிய கதைகளை தமிழில் கொண்டுவந்து குவிக்க வழியும் செய்யபட்டிருக்கின்றது
ஏன் எதற்காக என்பதெல்லாம் பதில்வரா மர்மங்கள்
அந்நேரம் அதாவது 1950களில் காங்கிரஸ் செய்த தவறு திறமையான எழுத்தாளர், தமிழறிவு கொண்டோரை அரவணைக்க தவறியது, கலைஞர்கள் எழுத்தாளன் கவிஞன் என யாரையும் காங்கிரஸ் தொடவில்லை
ஆனால் திமுக இவர்களை அணைத்து கொண்டு வளர்த்தது, அண்ணாதுரை அதை சரியாக செய்தார், காங்கிரஸின் வீழ்ச்சி இதனில்தான் தொடங்க்கிற்று
அப்படி திமுகவின் மிகபெரிய தூணாக விளங்கினார் சிற்றரசு
இன்று அவரின் நினைவுநாள், ஆனால் அப்படி ஒருவர் இருந்ததோ கட்சிக்கு மிக கடுமையாக உழைத்ததோ அக்கட்சியில் யாருக்கும் தெரியவில்லை என்பதுதான் விஷயம்
அவர் பேனாவும்தான் எழுதியது
சரி, அந்த "நம் நாடு" பத்திரிகை என்ன ஆனது? , அதெல்லாம் தூக்கி வீசபட்டு எங்கும் முரசொலி எங்கும் கருணாநிதி எங்கும் அவர் குடும்பம் என ஒரு உள்கட்சி புரட்சி நடதது, அந்த புரட்சி ஜோதி இன்றுவரை காக்கபடுகின்றது.
No comments:
Post a Comment