அந்த நேரு நல்லவர், இந்தியா மேல் அவருக்கு பெரும் பற்றும் அது வளரவேண்டும் எனும் ஆசையும் இருந்தது ஆனால் அவரின் ஆசை சூரிய உதயத்தை காணவேண்டும் என்பது ஆனால் ஓடியதோ மேற்கு நோக்கி.
அவருக்கு நாட்டு பற்று இருந்த அளவு இந்நாட்டின் கலாச்சாரம் பற்றியோ மதம் பற்றியோ உயர்வான சிந்தனைகள் இல்லை. விவேகானந்தர் சொன்ன வழியினை பின்பற்றியிருந்தால் நேரு எக்காலமும் கொண்டாடபடும் மாபெரும் தலைவனாக வரலாற்றில் நின்றிருப்பார் ஆனால் அவரின் மனமெல்லாம் இந்திய கலாச்சாரத்தினை பற்றி தாழ்வு மனப்பான்மையும் மேற்கத்திய நாகரிகத்தில் ஒரு பெருமிதமும் இருந்தது
இதனால் இந்தியாவின் மத கலாச்சார அபிமானம் அவருக்கு இல்லை, இங்கு நேருவால் நடந்த குழப்பங்களுக்கு அதுதான் முதல் காரணம்.
அவர் ஒரு இந்திய இளவரசன் போன்ற வளர்ப்பு, அக்கால அரசகுடும்பம் போல அவர் வெள்ளையரோடே வளர்ந்தார், வெள்ளையரில் ஒருவராக தன்னை எண்ணினார். இந்நாடு ஐரோப்பிய பாணி நாடாக மாற அவர் முடிவு செய்தார், இந்த கலாச்சாரமோ மதமோ அவருக்கு முக்கியமில்லை, அவை எல்லாம் வீண் என கண்டார்.
சுதந்திரத்துக்கு பின் நேருவின் வீழ்ச்சி இதில்தான் தொடங்கிற்று
இதை நேரு எனும் ஒரு தலைவனை மட்டும் பார்ப்பதை விட அக்கம்பக்கம் நாடுகளை ஒப்பிட்டால் இன்னும் சரியாக புரியும்
நேரு பதவி ஏற்றபொழுதுதான் பதவிக்கு வந்தான் சீனத்து மாவோ , ஆனால் அவன் சீன நாகரீகம், கலாச்சாரம் காக்கபட வேண்டும் என்பதில் கவனமாயிருந்தான். அவன் அரசியலுக்காய் மதமில்லை என்றானே தவிர பண்டைய சீன பாரம்பரியங்களை உயிரை கொடுத்து காத்து வளர்க்க முற்பட்டான்
சீனாவுக்கு சொந்தமான் நிலமோ இல்லை அதற்கு அப்பக்கம் இருக்கும் மகா முக்கியமான கேந்திரமோ அவன் தீர்க்கதரிசனமாக வளைக்க தவறவில்லை
அரசியல் என்பது ஆன்மீக தத்துவ கூடமல்ல, அறத்துக்கு அப்பாற்பட்டு செய்ய வேண்டிய விஷயம் ஏராளம் உண்டு
தன்னை மாபெரும் சீன நாகரிகத்தின் வாரிசாக கருதிய மாவோ அதை சரியாக செய்தான், அதில் சீனா எழும்பிற்று
இஸ்ரேலுக்கு பென்குரியன் அதை செய்தார். யூத நாட்டுக்கு எது தேவையோ அதை சரியாக செய்தார்
மாவோ தன்னை சீனனாக கருதினான் , பென்குரியன் தன்னை யூதனாக கருதினான். ஆனால் நேரு தன்னை ஐரோப்பியனாக கருதினார்
அந்த நினைப்பில்தான் செய்ய கூடா அவ்வளவையும் செய்தார்.
மாநில கட்சிகளை தடை செய்யாமல் பிரிவினை வாத கட்சிகளை வளரவிட்டது, காஷ்மீர் சிக்கலில் முடிவுக்கு வரமுடியாமல் இழுத்து கொண்டே சென்றது, மாவோவினையும் தன்னை போல் நினைத்து ஏமாந்தது
வெள்ளையனோடே வெளியேறவேண்டிய மிஷனரிகளை திருப்பி அனுப்பாமல் கொஞ்சியது
அந்நாடு பாகிஸ்தான் என இஸ்லாமிய குடியரசாக அமைந்தபொழுது இந்நாடு சமயசார்பற்ற நாடு என முழு பொய்யினை சொன்னது, எல்லை கலவரங்களுக்கு பெரும் எதிர்வினை ஆற்றாதது என ஏராளம்
1947லே இந்துக்கள் கடுமையாக விரட்டபடுவதை நேரு தடுத்திருந்தால் காஷ்மீரில் பண்டிட்டுகளை விரட்டி அடிக்க பாகிஸ்தான் தயங்கியிருக்கும் ஆனால் நேரு செய்யவில்லை
இட ஒதுக்கீட்டின் வரையறைகளை, கால அளவை முறையாக செய்யாமல் அமல்படுத்தியது இன்னொரு பெரும் தவறு
சீக்கியர்களை நேரு கண்டுகொள்ளாமல் இருந்தது அடுத்த தவறு
புற்றீசல் போல கிறிஸ்தவ சபைகள் பெருக சட்டம் இயற்றி தடுக்காதது மடத்தனம், ஒரு ஊருக்கு ஒரு கிறிஸ்தவ சபை போதாதா? ஏன் தெருவுக்கு மூன்று சபையும் வீண் குழப்பமும்?
இதை தடுங்கள் என்றால் நேரு ஏன் தடுக்கவில்லை?
பள்ளிகளில் காந்தி , சுதந்திரபோர், மொகலாய சாம்ராஜ்யம் என்றுதான் இந்நாட்டு குழந்தைகள் படிக்க வைக்கபட்டனர், உண்மையான இந்திய பாரம்பரியம், வரலாறு, இந்துக்கள் தாத்பரியம், பெருமைகள் எல்லாம் அவர்களுக்கு மறைக்கபட்டன
பாகிஸ்தானோ இந்தியா எதிரி நாடு என வன்மம் வளர்க்க இந்நாட்டு குழந்தைகள் பிரிவினையின் வலி தெரியாமல் வளர்ந்தனர், அதுதான் இன்று பாகிஸ்தான் ஜிந்தாபாத் எனும் அளவுக்கு மோசமாயிற்று
கம்யூனிஸ்டுகளை அமெரிக்காவும் ஐரோப்பாவும் தடை செய்தபொழுது நேரு ஏன் செய்யவில்லை? குழப்பத்தின் உச்சம் இது, இந்நாடு அவர்களால் சந்தித்த இழப்புகள் ஏராளம்.
வெற்று நிலத்தினை சீனா வைத்து என்ன செய்ய போகின்றது என அவர் சீன படையெடுப்பை பற்றி சொன்னது அரசியல் ரீதியாக மடத்த்தனம்
அதை சர்வதேச சிக்கலாக்கி வல்லரசுகள் உதவியுடன் மீட்க முயற்சிக்காமலே அவர் சிக்கலை கைவிட்டது மிக பெரிய தவறு
இந்நாட்டின் பெரும்பான்மை இந்துக்களின் உணர்வுகளை அவர் புரிந்து கொள்ளாமலே புறந்தள்ளியதும், 1962லே ஆர்.எஸ்.எஸ் அமைப்பிடமும் சில நல்ல விஷயம் உண்டு என அவர் அறிந்ததும் வரலாறுகள்.
தன் கடைசி காலத்தில்தான் தன்மேலான தவறு அவருக்கு புரிந்தது அத்தோடு அவரும் இறந்தார்
நிச்சயம் நேரு நல்ல அரசியல்வாதி, நாட்டு பற்றாளர், சிறையில் பல ஆண்டுகளை கழித்தவர் ஊழலற்றவர், இந்நாட்டுக்கு பலமான அஸ்திவாரங்களை எழுப்பியவர்
ஆனால் அவரின் ஐரோப்பிய மேம்போக்கான மனமும், இந்தியா மேல் அவருக்கு இருந்த ஒரு இழிவான மனநிலையும் இங்கு பல சிக்கல்களை கொடுத்தன
காந்தி கொலைக்கு பின்பும் நேரு திருந்தவில்லை, தவறு மேல் தவறு செய்துகொண்டே இருந்தார். இந்துக்களின் உணர்வுகளை அவர் புரிந்து கொள்ளவே இல்லை
அவர் இந்த இந்து பூமியில் ஒரு கோவிலுக்கு சென்று வழிபட்டதாகவோ, இந்திய பாரம்பரிய கொண்டாட்டங்களில் கலந்து கொண்டதாகவோ வரலாற்றில் பார்க்கமுடியாது
அது மிஷனரிகளுக்கு வாய்பாயிற்று, இந்துக்கள் மனம் சோர்ந்தனர். ஒரு இந்துபெரும்பான்மை நாட்டின் தலைவன் அப்படி இருந்திருக்க கூடாது
எல்லாம் சேர்ந்து காங்கிரஸை மக்களிடம் இருந்து பிரித்தது, நேரு சீக்கிய சமூகத்தை ஒதுக்கியது அவர் மகளின் உயிரையே குடித்தது பின்னாளைய சோகம்
சீக்கிய மத உரிமைகளையும் அவர்களுக்கான சில உரிமைகளையும் நேரு அன்றே அங்கீகரித்திருந்தால் இந்திராவுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்காது
ஆனால் நல்ல கலாச்சாரம் இந்தியாவினை காக்கும், இந்துமத எழுச்சி தேசத்தை காக்கும் அது அவசிய தேவை என்பதை அவர் புரிய மறுத்தார், அவரின் ஐரோப்பிய மனம் அதை ஏற்கவில்லை
விளைவு இந்து தர்மமும் இந்திய கலாச்சாரமும் அறியாத ஒரு விபரீத தலைமுறை இடையில் உண்டாயிற்று, நாடு முழுக்க குழப்பமும் நாட்டுபற்று இல்லா கூட்டமும் உருவாயிற்று
ஒரு கட்டத்தில் ஐரோப்பிய மனநிலை கொண்ட நேருவின் காங்கிரசுக்கு ஐரோப்பியரான சோனியாவே தலைவரனார்
அத்தோடு தேசம் காங்கிரசை கை கழுவிற்று
இப்பொழுது பாஜக ஆட்சி வந்துதான் 1948ல் நேரு செய்திருக்க வேண்டிய எல்லாவற்றையும் செய்கின்றது, இதெல்லாம் அன்றே நேரு செய்திருக்க வேண்டியவை
ஆம், கிட்டதட்ட 70 ஆண்டுகளுக்கு பின்புதான் காஷ்மீர் மீட்பு, சீனாவினை துணிந்து மிரட்டுவது, இத்தேசத்தில் ராமனுக்கு கோவில் உண்டு என தேசம் மாறுகின்றது
இது 1950களிலே ஏற்பட்டிருந்தால் தேசம் எப்பொழுதோ மாபெரும் வலுவான தேசமாய் மாறியிருக்கும், நேருவால் பல விஷயங்கள் 60 வருடம் நாட்டை பின்னோக்கி இழுத்துவிட்டன
நேரு ஒரு நல்ல இந்திய கலாச்சாரமும், ஞானமும் , பக்தியும், இந்து அபிமானமும் உள்ள பிரதமராக இருந்திருந்தால் இந்நேரம் பாஜக எனும் கட்சியே வந்திருக்காது
நேரு செய்த தவறுகளே பாஜக உதயமாகவும் பலம்பெறவும் முதல் காரணம், அதை சோனியா தொடர்ந்ததுதான் பாஜக இன்று அசுரபலம் பெற அடுத்த காரணம்
நேருவினை எம்மால் மறக்கமுடியாது. பெரும் அணைகள் தொழிற்சாலைகள் என நாட்டுக்கு முடிந்தவரை செய்தவர் ஆனால் காக்க வேண்டிய பாரம்பரியம் பலவற்றை அவர் செய்யவில்லை
மாவோவின் வெற்றி அவனின் கலாச்சார காவலில் இருந்தது, நேருவின் தோல்வி ஐரோப்பிய மனநிலையில் இருந்தது
இன்று நேருவின் நினைவுநாள்
காங்கிரஸ் நேருவின் தோல்விகளில் இருந்து பாடம் படிக்கட்டும். எப்படி சுருங்கியது காங்கிரஸ் என்பதை இன்றாவது உணரட்டும்
மாவோ , பென்குரியன் , பண்டாரநாயகே என நேருவின் சமகால தலைவர்களின் மனவோட்டத்தையும் நேருவின் மனவோட்டத்தையும் ஒப்பிட்டு பார்க்கட்டும்
அதில் இத்தேசம் எவ்வளவு இழந்தது என்பதையும், அந்த பாதிப்பில் பாஜக உருவாகி இன்று மிக வல்லமையாய் நேரு செய்த தவறுகளை சரி செய்கின்றது என்பதையும் கவனிக்கட்டும்
நேரு கோவிலுக்கு சென்றதில்ல, மதசார்பற்ற நாட்டின் பிரதமராக தன்னை காட்டி கொண்டார். அவருக்கு பின்னால் வந்தோரும் அதையே செய்தனர் காமராஜர் உட்பட
ஆனால் மோடி இந்துவாக தன்னை உலகறிய சொல்கின்றார். வழிபாடோ தியானமோ முதல் ஆளாக செல்கின்றார்
மோடி போட்டோ பிரியர் என்பார்கள், மவுண்பேட்டன் மனைவியுடன் போட்டோ எடுப்பதை விட, வாயில் சுருட்டுடன் ஐரோப்பியன் போல் போஸ் கொடுப்பதை விட
பாரத பிரதமர் கோவிலில் சாமி கும்பிட்டார் எனும் படம் ஒன்றும் தவறல்ல
அந்த படம் ஒவ்வொரு இந்துவினையும் தொடும், அவன் இந்து என்பதில் பெருமை அடைவான், அவனுள் உற்சாகம் ஓடும், பாரம்பரியம் காக்க, மதம் காக்க துணிவான்
மோடி அதைத்தன் செய்கின்றார்
இந்நாட்டுக்கு தனிபெரும் எதிர்கட்சியாக காங்கிரஸ் எக்காலமும் வேண்டும், அதற்கு அந்த கட்சி தன் கொள்கைகளை மாற்றட்டும்
அதற்கு நேரு செய்த பல தவறுகளை திருத்தினாலே போதும்.
No comments:
Post a Comment