ஏனுங்க்னா, செல்வபுரத்துல இருந்து காந்தி பார்க்குக்கு எப்டினா போகோனும்.
தம்பி நேரா போனியனா 'வீதி' வரும்...அதை தாண்டி
அட அது சாதிப்பேரு வீதி தம்பி...பேர சொல்லக் கூடாது புரியுதா ?.. சரி இங்கவா காதுல மட்டும் சொல்றேன்...எவனாவது கேட்டு தொலைக்கப்போறான் (காதில்) "செட்டி வீதி"
இப்ப இந்த வீதி வளியா போனயினா லெப்ட் எடுக்கோனும் தெலுங்கு வீதி வரும்.
அதென்னங்னா தெலுங்கு வீதி ? வேற பாஸை பேரை மட்டும் வீதிக்கு வைக்கலாமா ?
அட என்ன தம்பி, பக்கத்துல வா...அது "தெலுங்கு பிராமணாள்" வீதி...அதுல போய்க்கோ...
நேரா போய் போக முடியாதாண்ணா ?
அட நேரா போனியினா "கருப்பு வீதி" வந்திரும்.
என்னங்னா கருப்பு வீதியா அதெங்னா இருக்கு
(காதில்) தம்பி அது "கருப்பு கவுண்டர் வீதி"..
சரிங்னா அப்ப தெலுங்கு வீதில லெஃப்டெடுத்து நேரா போய் ரைட் எடுக்கனுமா ?
அட என்னா தம்பி...ரைட் எடுத்தயினா வீதில போயிருவ (காதில) இடையர் வீதிக்கு போயிருவ.
ஓ சரிங்னா...அப்ப நேரா போகனும்
ஆமா தம்பி நேரா போனயினா நீ கேக்கற காந்தி பார்க் வந்திரும்.
அட என்னங்னா இப்டி பொசுக்குனு சாதி பேர சொல்லிப் போட்டீங்க ?
எந்த சாதிப் பேரை சொன்னன் தம்பி ?
காந்திங்கறது சாதிப் பேருண்ணே....
என்ன தம்பி சொல்ற... அப்ப வெறும் பார்க்குன்னே வச்சுக்கோ. நமக்கெதுக்கு பொல்லாப்பு.
சாதியை (பெயரை) ஒழித்து விட்டோம்.
No comments:
Post a Comment