நீங்கள் அடிக்கடி Swiggy அல்லது Zomato இல் ஆர்டர் செய்கிறீர்களா? உங்களுக்குத் தெரிந்ததை தயவுசெய்து பகிரவும்!
ஆர்டர் செய்யும் போது நீங்கள் தேர்ந்தெடுத்த அதே ஹோட்டலில் இருந்து உணவு வருகிறது என்பதை எப்படி அறிவது?
Bcz, நேற்று, சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள ஹோட்டல் ஹாலிவுட்டில் இருந்து ஸ்விக்கி ஆப்பில் இரவு உணவு பொருட்களை ஆர்டர் செய்தேன்.
ஆனால், பேக்கிங்கில் உள்ள லேபிள்களில் அல்லது கேரி பேக் போன்றவைளில் ஹோட்டல் பெயர் கொண்ட எந்த அடையாளமும் அதில் இல்லை.
உள்ளூர் கடைகளில் கிடைக்கும் ஒரு சாதாரண பழுதடைந்த கேரி பேக்கை வைத்து டெலிவரி செய்யப்பட்டது.
(நாம் நேரில் சென்று வாங்கும்போதெல்லாம், அவர்களின் ஹோட்டல் பெயரின் லேபிள்களுடன், நன்கு பேக் செய்யப்பட்ட கேரி பேக்கில் உணவைத் தருவர்).
பொருட்களின் சுவை கூட அந்த ஹோட்டலின் சுவை போல் உணரப்படவில்லை, ஆனால் மிகவும் சராசரி அல்லது மிகவும் மோசமானதாக இருந்தது.
இந்த Food Apps-கள் போலியான பொருட்களை வழங்கி மோசடி செய்கிறதா?
Bcz, நான் கவனித்தேன், வடபழனி காவல் நிலையத்தின் பக்கத்துத் தெருவில் அமைந்துள்ள ஒரு டீ கடைக்கு அருகில் ஒரு கட்டிடத்தின் முன், முன்னணி உணவு டெலிவரி ஆப் டி ஷர்ட்களுடன் சுமார் 50க்கும் மேற்பட்ட டெலிவரி பாய்கள் நின்று கொண்டு இருப்பர். அது ஒரு கிச்சன் பாயிண்ட் என்று கூறப்படுகிறது. அங்கிருந்து டெலிவரி பாய்ஸ்கள் பல வகையான உணவு பார்சல்களை எடுத்துக் கொண்டு செல்வார்கள்.
உண்மையில் உங்களுக்கு தெரிந்ததை பகிர்ந்து கொள்ளுங்கள்!
(சென்னையில் மட்டும் பில் கொடுப்பதில்லை. ஆனால், கேரளாவில் நான் உணவு ஆர்டர் செய்யும்போதெல்லாம், அந்த ஹோட்டலின் அங்கீகரிக்கப்பட்ட பேக்கிங்கில் உள்ள பொருட்களை பில் உடன் பெற்றுக் கொள்வேன்.
No comments:
Post a Comment