ஆ.ராசா காலத்தில் BSNL சிறப்பாக இயங்கியது, 2ஜி ஊழல் என்ற ஒரு குற்றச்சாட்டை உருவாக்கி ஆட்சியில் அமர்ந்து இன்று அந்நிறுவனத்தையே இழுத்து மூடும் அளவுக்கு கொண்டு வந்த தந்திரத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
ஜேக்கப்,
ஆண்டிமுத்து ராசா காலத்திற்கு முன்புவரை BSNL சிறப்பாக இயங்கியது.
16.05.2007 ஆ. ராசா தொலைத்தொடர்புத்துறை மந்திரியாக பதவியேற்கிறார்.
2006 -2007 ல் BSNL இலாபம் 7806 கோடிகள். (ஆ. ராசா பதிவியேற்பதற்கு முந்தைய வருடம்)
2007 -2008 ஆ. ராசா பதவியேற்ற பின் முதல் வருட இலாபம் 3009 கோடிகள். முந்தைய வருடத்தைவிட 50% குறைவு.
2008 -2009 ல் BSNL இலாபம் 575 கோடிகள்.
7800 கோடிகள் இலாபத்தில் இருந்த நிறுவனத்தை வெறும் இரண்டே வருடங்களில் 90% இலாபத்தை குறைத்தவர் ஆ. ராசா.
இது மட்டுமா ஆ. ராசாவின் சாதனைகள் தொடர்கிறது . . .
2009 -2010 BSNL . ஆம் 1823 கோடிகள் நஷ்டம்.
BSNL வரலாற்றில் முதல் நஷ்டம் ஆண்டிமுத்து ராசா தொலைத்தொடர்புத்துறை மந்திரியாக இருக்கும் போது ஏற்படுத்தப்பட்டது.
2010 நவம்பர் வரை அப்பதவியில் இருந்தார் 2010 -2011 ஆம் ஆண்டின் நஷ்டம் 6384 கோடிகள்.
No comments:
Post a Comment