இந்த தேசம் சுதந்திரம் அடைந்தபோது இரு துண்டுகளாகியிருந்தது, இந்துக்களின் தேசத்தில் நாங்கள் வாழமுடியாது அது இந்து தேசம் என சொல்லி பாகிஸ்தானை வாங்கி கொண்டு சென்றார் ஜின்னா
சென்றவர்கள் அவர்கள் முறைபடி சம்பிரதாயபடி இஸ்லாமிய குடியரசான பாகிஸ்தானை ஸ்தாபித்தார்கள்
இந்துக்களின் நாடாகத்தான் அறியபட்டது அதில் ஆச்சரியம் ஏதுமில்லை, இந்துநாடு என்றே அது முழுக்க அடையாளத்தோடு இருந்தது
பின் 1950ல் சட்டங்களை தொகுக்கும் போதுதான் "சமய சார்பற்ற தேசம்" என தன்னை அடையாளபடுத்தியது
இதெல்லாம் ஏன் என்றால் யாரிடமும் பதிலே கிடையாது, கேட்டால் சங்கி மதவிரோதி
அப்படி இந்து இந்தியாவாக அறியபட்ட அந்த இந்தியாவின் சுதந்திரத்தை எப்படி அறிவிப்பது என மவுண்ட்பேட்டன் இந்தியர்களிடமே கோரினான்
இந்த அதிகாரமாற்றம் இந்தியாவின் பாரம்பரியபடி நடக்கட்டும், அதுதான் நல்லது. எந்நிலையில் இந்தியாவினை பிரிட்டன் பெற்றுகொண்டதோ அந்த கலாச்சாரபடியே விட்டுவிட்டு நாங்கள் வெளியேற வேண்டும் என்றான்
இந்து ஆச்சாரபடி சுதந்திரம் வழங்க வேண்டும் என முடிவு செய்யபட்டது
ஆம் பிரிட்டிஷ்காரன் நேருவுக்கு அந்த நல்ல விஷயத்தை சொன்னான் மவுண்ட்பேட்டன், இது இந்து தேசம் என்பது அவனின் சரியான நம்பிக்கை. நாத்திரகரான நேரு விஷயத்தை ஆத்திரகரான ராஜாஜியிடம் விட்டுவிட்டார்.
ராஜாஜி தேர்ந்த ஞானி, குறைசொல்லமுடியா இந்து, அவர் இந்துமரபுபடி ராஜகுருதான் செங்கோலை அரசனிடம் கொடுத்து ஆட்சிமாற்றத்தை செய்வார், அந்த மரபுபடி நாமும் செய்யவேண்டும் என்றார்
அத்தோடு திருவாவடுதுறை ஆதீனத்தை தொடர்பு கொண்டார், அப்பொழுது அந்த சன்னிதானத்தின் இளையபீடம் பண்டார சுவாமிகள் ஒரு செங்கோலுடன் டெல்லி சென்றார்
ஆம், அப்பொழுது இந்து இசை ஒலிக்க , மங்கல வாத்தியங்கள் முழங்க, கங்கை நீர் தெளிக்கபட, திருவாவடுதுறை ஆதீனமே செங்கோல் மாறும் நிகழ்வினை நடத்தி வைத்தார்கள்
அப்பொழுது திருஞான சம்பந்தரின் தேவார வரிகள் ஓதபட்டன
திருநனிப்பள்ளி தேவாரத்தில் இருந்து இந்த வரிகளும்
“இடுபறை யொன்ற அத்தர் பிரான்மேல் இருந்து
இன் இசையால் உரைத்த பனுவல்,
நடுவிருள் ஆடும் எந்தை நனிபள்ளி உள்க
வினை கெடுதல் ஆணை நமதே “
என்றும்.
திருவேதிக்குடி தேவாரத்தில் இருந்து இந்த வரிகளும்
“சிந்தை செய வல்லவர்கள் நல்லவர்கள் என்ன நிகழ்-
வெய்தி இமையோர் அந்தவுலகெய்தி
அரசாளும் அதுவே சரதம்
ஆணை நமதே”
கோளறுபதிகத்தில் இருந்து இந்த வரிகளும்
“தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்,
ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே”
என ஓதப்பட்டன
ஆம், மும்முறை ” அரசாள்வார் ஆணை நமதே” என உரக்க சொன்னபடி , ஆம் தமிழில் சொன்னபடி செங்கொல் கைமாறி ஆட்சி இந்தியாவிடம் ஒப்ப்படைக்கபட்டது
எவ்வளவு பெருமை இது?
எவ்வளவு அர்த்தமான வரி இது?
“அரசாள்வார் ஆணை நமதே” என டெல்லியில் உரக்க தமிழில் பாடபட அதன் அர்த்தம் இதர மொழிகளில் சொல்லபட மிக உருக்கமான நெகிழ்ச்சி கண்ணீர் அங்கே பெருகிற்று
பிரிட்டிஷாரே அந்த அர்த்தம் கண்டு புன்னகை சிந்தினான், எந்த இதுமதத்தை அழிக்க முயன்றானோ அது தன்னை மீட்டு நின்ற தருனம் அது, பட்டொளி வீசி எழுந்த நிமிடம் அது
ஆம், இப்படி இந்து முறைபடி தமிழ் தேவாரம் பாடித்தான் “அரசாளும் ஆணை நமதே” என்ற திருஞான சம்பந்தரின் வார்த்தையோடுதான் சுதந்திரம் பெற்றோம்
இது வரலாறு, அந்த காட்சிபடம் இன்றும் திருவாடுதுறை ஆதீனத்தில் உண்டு, டெல்லி மியூசியத்திலும் உண்டு
இப்படியெல்லாம் தமிழ் இந்து டெல்லிவரை கோலோச்சி, தமிழ் தேவாரம் பாட பெற்ற சுதந்திரம் இது “அரசாள்வார் ஆணை நமதே” என சொல்லி விடுதலை பெற்ற தேசமிது
சரி, அந்த படம் திருவாடுதுறை ஆதீனத்தில் உண்டு, அந்த செங்கோல்?
அது மறைந்தது, நேரு அதை எங்கோ வீசிவிட்டு தன் அலுவலகத்தில் மவுண்ட்பேட்டன், டல்ஹவுசி என யார் படத்தை எல்லாமோ மாட்டி வைத்து அழகு பார்த்தார்
சீன பிரதமராக இந்தியா வந்த சூ என் லாய் இதை கண்டு வாய்விட்டு சிரித்தான் "நீங்கள் இந்த பிரிட்டிஷ்காரனை எதிர்த்து போராடி சிறை சென்றீர்கள், இப்போது அவன் படத்தையே வைத்திருக்கின்றீர்கள்" என அவன் கேட்டபோது நேருவிடம் பதில் இல்லை
அதன்பின்னும் நேரு திருந்தவில்லை ,சீனன் அடித்து திருத்த முயன்றான்
பின் அந்த செங்கோல் பற்றி தகவலே இல்லை, காங்கிரஸ் இந்து நாடு எனும் பெயரை மறைத்தது அப்படியே அது நிரந்தரமாக மறைய செங்கோலையும் மறைத்தது
ஆனால் காலம் அதனை மறைக்கவில்லை, அது பிரக்யாராஜ் காட்சிமாளிளையில் இருந்தது
மோடி இப்போது அதனை அடையாளம் கண்டு மீட்டெடுத்து புதிய பாராளுமன்ற கட்டடத்தில் அந்த வரலாற்று பொக்கிஷத்தை வைப்போம் என்கின்றார்
இந்த ஒரு விஷயத்துக்காக அவரை காலில் விழுந்தே வணங்கலாம், ஏன் விழுந்தே கிடக்கலாம்
நாமும் இந்திய குடிமக்களாக நல்ல இந்துமக்களின் மரபில் உரக்க சொல்லலாம்
"வாழ்க அந்தணர் வானவ ரானினம்
வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக
ஆழ்க தீயதெல் லாமர னாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே."
ஆம் "வேந்தனும் ஓங்குக .. வேந்தனும் ஓங்குக.."
பாரத வேந்தனும் ஓங்குக.......
காசி துலங்க துலங்க தேசம் எப்படியெல்லாம் துலங்கும் என்றால் இப்படித்தான்
சிவனடியார்களாக வாழ்ந்த தமிழக சோழ மன்னர்களின் மரபில் , அவர்கள் ஆட்சியின் அடையாளமாக வைத்திருந்த செங்கோலின் வடிவம் இன்று தேசத்தின் அடையாளமாக மாறுவதெல்லாம் இது சிவபூமி என்பதை
அழுத்தமாக சொல்கின்றது
சோழர்கள் தாங்கள் ராமபிரானின் வாரிசுகள் என்றதும், இந்த அரசபதவி என்பது மதத்தை தர்மத்தை காக்க என சொல்லி கல்வெட்டுகளில் வெட்டி வைத்ததும் அர்த்தமில்லாமல் இல்லை, அதெல்லாம் தெய்வத்தின் பரிபூரண அனுகிரஹம்.
No comments:
Post a Comment