வேலைக்கான நேர்காணலுக்கு (Interview) போய்ட்டு சாப்பிட காசில்லாம டீ குடிச்சிட்டு, வேலையும் கிடைக்காம பசியோட வீட்டுக்கு வந்திருக்கீங்களா சார் ?
வீட்டுல டீவி இல்லாம பக்கத்து வீட்டுல டீவி பாத்துட்டு இருக்கும் போது இடைலையே நிப்பாட்டிட்டு, நாளைக்கு வான்னு சொல்லிருக்காங்களா சார் ?
பண்டிகைக்கு புது உடுப்பு வாங்க காசில்லாம, வெளியிலையே போகாம வீட்டுக்குள்ளையே இருந்திருக்கீங்களா சார் ?
உறவினரின் குடும்ப விழாவிற்கு (function) பரிசு வாங்க காசில்லாம ப்ரண்டோட உடுப்ப போட்டுட்டு போய்ட்டு ஒரு குற்ற உணர்வோட இருந்துட்டு வந்திருக்கீங்களா சார் ?
நண்பர்கள் எல்லாரும் சுற்றுலா போக கூப்பிட்டும் வீட்டுச் செலவுக்கு காசு வேணும்ன்னு, வீட்ல அம்மா விடல்லன்னு பொய் சொல்லிட்டு இருந்திருக்கீங்களா சார் ?
நம்ம அப்பா சொந்தக்காரன்ட கடன் கேட்டுப் போக, உதவி செய்றேன்னு சொல்லிட்டு அவங்க வீட்டு வேலை எல்லாம் செஞ்சு கொடுத்து அந்த காசை வாங்கிட்டு வந்து, உங்கள சமாளிக்க ஒன்னுமில்லடா சும்மா பேசிட்டு இருந்தோம்னு சொன்ன பொய்யை கேட்டிருக்கீங்களா சார் ?
நம்ம இருக்குற நிலைமைக்கு நம்மள நம்பி வந்தா கஷ்டப்படுவாளேன்னு, பிடிச்ச காதல விட்டுக் கொடுத்திருக்கீங்களா சார் ?
தெரிஞ்சத படிக்க விருப்பமிருந்தும் வாய்ப்புக் கிடைக்காம கிடைச்சத படிச்சி, வேற துறையில் உங்க வாழ்க்கையை தொலைச்சிருக்கீங்களா சார் ???
யாராவது நடுத்தர குடும்பத்துப் பையன் நல்லபடியா சம்பாதிச்சு நல்லா முன்னேறி வந்தா, எப்படி கெடந்தவன் இன்னைக்கு எப்படி இருக்கான் பாருனு மட்டும் பேசிடாதீங்க...
"ஏன்னா அவன் அடைஞ்சத விட, இழந்தது அதிகம் சார்..."
ஆதரிக்கலைனாலும் பரவாயில்லை... அவதூறா பேசாதீங்க சார்.
No comments:
Post a Comment