காஞ்சி மடம் ஆரம்பித்து 2000 வருடங்களுக்கு மேல் இருக்கும்.ஆதிசங்கரர் தோற்றுவித்தது.இதில் கருத்து வேறுபாடு உள்ளது அதை எடுத்துக்கொள்ளவேண்டாம்.
அவர் ஆன்மீக பாதையை மிக எளிமையாக நடத்தி கொண்டு சென்றார்.அந்த காலகட்டத்தில் பணப்புழக்கம் இப்போதுள்ளது போல் இல்லை.அவர் ஏழை எளியவர்களுக்கு கருணை காட்டி அவர்களின் வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் அடைவதற்கு அருளியிருக்கிறார்.
அதற்கு முன்பு போதேந்திர ஸ்வாமிகள் நாம ஜபத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பல அற்புதங்களை மக்களுக்காக நிகழ்த்தியுள்ளார்.இன்றும் அவர் சமாதியில் நாம ஜப சப்தம் கேட்பதாக கூறுகின்றனர்.
முதலாவதாக ஆதிசங்கரரும் பல அற்புதங்களை செய்தியிருக்கிறார்.அந்த காலகட்டத்தில் சமனமதம் தழைத்தோங்கி வந்தது.அவர்கள் மற்ற மதத்தினரை துன்புறுத்தினர்.அவர்களை வாதம் செய்து வென்று மக்களை காப்பாற்றினார்கள்.
60வருடங்களுக்கு முன் மத மாற்றம் தீவிரமாக இருந்த சமயத்தில் குறிப்பாக மீணாட்சிபுர சம்பவம் ஜெயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் 69 மடாதிபதி அங்கு சென்று சனாதன தர்மத்தை பற்றி விரிவாக கூறி மதமாற்றத்தை தவிர்த்தார்கள்.அதன்காரனமாகவே அரசியல் விரோதம் வந்து பல நிகழ்வுகள் நடந்தன.அந்த கால கட்டத்தில் புற்றீசல் போல கிருஸ்துவ பள்ளிகள் தோன்றியது.சிறு பெண் குழந்தைகளை பொட்டு வைக்க கூடாது பூ வைக்கக்கூடாது ஏன வறுபுறுத்தி தங்கள் மதத்தை பிஞ்சு உள்ளங்களில் ஏற்றினார்கள்.
ஜெயேந்திர ஸரஸ்வதி அவர்கள் அதன்பின் நிறைய பள்ளிகள்,கல்லூரிகள் மடத்தின் சார்பில் நடத்த ஆரம்பித்தார்கள்.
அதன் பின்புதான் கொஞ்சம் குறைந்தது.வறலாற்றை பார்த்தால் இதெல்லாம் நடந்தேறியதை அறியலாம்.அவ்வப்போது மாற்றங்கள் வருகிறது.
காலத்தின் கட்டாயமாக ஆச்சார்யர்கள் மதத்தை நிலைநாட்ட நடவடிக்கைகள் எடுக்கிறார்கள்.அதில் மாற்று கருத்து உடையவர்களால் இடைஞ்சல்கள் ஏற்படுவது இயல்பே.அதனால் சில நிகழ்வுகள் நடந்தேறின.
இப்போதுள்ள விஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் தன் பரம குருவான சந்திரசேகர் சரஸ்வதி அவர்களை பின்பற்றியே நடவடிக்கைகள் எடுக்கிறார்கள்.எந்த மதத்தையையும் குறைவாக மதிப்பிடுவதில்லை.இந்த கொராணா காலத்திலும் மக்களுக்காக முதலமைச்சர் நிதிக்கு நன்கொடை வழங்கியூள்ளார்.
கோவில்களில் பூஜை செய்யும் அர்ச்சகர்களுக்கு உதவித் தொகை அளித்தார்.இதில் தேவாரம் சொல்பவர்களும் அடக்கம்.
தமிழகமெங்கும் பூஜைகள் நடைபெறாத கோவில்களை கணக்கெடுத்து அங்கு விளக்கேற்றவும் பூஜை செய்யவும் ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறார்.அதற்காக குழு பல ஆங்காங்கே அமைத்து மாதம் ஒருமுறை சென்று ஊர்மக்கள் துனையுடன் ஜாதி பேதமின்றி வழிபாடு செய்யப்படுகிறது.விளக்கு பூஜையி ஊர்மக்கள் கலந்து கொண்டு சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
கொராணா அகலுவதற்காக மக்களை தினசரி பாராயணம் வீட்டிலிருந்தபடியே சொல்ல சொல்லி இருக்கிறார்கள்.
திருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகம்,கந்த சஷ்டி கவசம்,திருசெங்கோடு பதிகம் , மற்றும் ருத்ரம்,துர்கா ஸப்தஸதி போன்ற ஸ்லோகங்களை கூறியுள்ளார்.இதை ஜாதி மதபேதமல்லாமல் யாருக்கெல்லாம் தெரியுமோ அவர்களெல்லாம் செய்யலாம் என கூறியுள்ளார்.
ஆக ஓவ்வொரு மடாதிபதி ஒரு முறையை நன்றாகவே செய்துள்ளார்கள்.ஆக புனிதம் ஒன்றும் குறையவும் இல்லை கெடவும் இல்லை என்பது என் கருத்து.
No comments:
Post a Comment