Sunday, August 6, 2017

“ இது மக்களின் காசு, ஏழைகளின் காசு”

கருப்பு பணம் – ரூ.15 லட்சம் உண்மையில் மோடிஜி சொன்னது என்ன? எல்லோர் வங்கி கணக்கிலும் பணம் போடுவேன் என்று சொன்னாரா . 
ஹிந்தி தெரியாத தமிழ் நாட்டில் மட்டும் இப்படி செய்திகள் ஏன் உலவுகின்றன .
பேராசைக்காரர்கள் ஊளையிடாமல் ஒதுங்கி, பதுங்கி, வாயையும், சர்வாங்கத்தையும் பொத்திக் கொள்ளலாம்.

Image may contain: 2 people, people standing
அவருடைய உரையின் தமிழாக்கம்:
“ சகோதர, சகோதரிகளே, எனக்கு பதில் சொல்லுங்கள்.
கொள்ளையடிக்கப்பட்ட பணம், திரும்பக் கொண்டுவரப்படவேண்டுமா, இல்லையா? “
“ கொண்டுவரப்படவேண்டும்” என ஆர்ப்பரிக்கின்றனர் மக்கள்
“கருப்பு பணம், திரும்பக் கொண்டுவரப்படவேண்டுமா, இல்லையா?”
“ கொண்டு வரவேண்டும்” என ஆமோதிக்கின்றனர் மக்கள்
“ கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின் ஒவ்வொரு ரூபாயும், கொண்டு வரப்பட வேண்டுமா, இல்லையா?"
"ஆம்" என்கின்றனர் மக்கள்
.
“இந்த ரூபாயின்மீது, மக்களுக்கு அதிகாரம் உள்ளதா இல்லையா?”
"ஆம்", என்கின்றனர் மக்கள்
இந்த பணம், மக்களுக்கு சொந்தமானதா, இல்லையா?”, என்று கேட்கிறார்.
"ஆம்", என்கின்றனர் மக்கள்
.
.
“ அன்னிய நாட்டு வங்கிகளில் டெப்பாசிட் செய்யப்பட்டிருக்கும் பணம், திரும்பக் கொண்டு வந்தால், ஒவ்வொரு “ஏழை”க்கும் ரூ.15 லட்சம் கிடைக்குமளவுக்கு உள்ளது. அந்த அளவுக்கு பணம் அங்கு உள்ளது”.
“நமது எம்பி ஐயா, ரயில்வே லைன் பற்றி பேசினார். கருப்பு பணம் திரும்பக் கொண்டுவரப்பட்டால், ரயில்வே லைன் போட முடியும்.”
“பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால், கருப்பு பணத்தின் ஒவ்வொரு பைசாவும் திரும்பக் கொண்டுவரப்படும். ஏழை மக்கள் நலனுக்கு செலவிடப்படும். “
“ இது மக்களின் காசு, ஏழைகளின் காசு”
.
.
இதுதானுங்க மோடிஜி பேசியது. சந்தேக பிராணிகள், விடியோ பதிவை, மீண்டும், மீமீண்டும், மீமீமீண்டும் பார்க்கலாம்.
.
.
“ 100 நாளில் திரும்பக் கொண்டுவரப்படும், “ஒவ்வொரு” இந்தியனின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்”, என்பதெல்லாம், தோத்தாங்குளிகளால், கற்பனையாக இட்டுக்கட்டப்பட்ட கதைகள், வக்கிர புத்தியின் வெளிப்பாடுகள்.
.
.
பி.கு:
கருப்பு பணத்தின் அளவை உத்தேசமாக மக்களுக்கு புரிய வைக்க அவர் சொல்லும்போதும் கூட –
“ஒவ்வொரு ஏழைக்கும் ரூ.15 லட்சம் கிடைக்குமளவுக்கு வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ளது”, என்றுதான் கூறுகிறார்.
““ஏழை” எனும் சொல்லை கவனமாக குறிப்பிடுகிறார்.
“எத்தர்”களுக்கான நலனுக்கு இப்பணம் பயன்படுத்தப்படாது, என்பதை குறிப்பாலுணர்த்து.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...