காமராஜரைப் பற்றிப் பேச மோடிக்கு அருகதை இல்லை! - ரீகௌண்டிங் மினிஸ்டர்.
ஆமாமா! காமராஜரை 'அண்டங்காக்கா' என்று புகழ்ந்த தி.மு.க.வுடன் கூட்டணி வைத்திருக்கும் உங்களுக்குத்தான் அந்த அருகதை உண்டு!
சுவிஸ் வங்கியில் பணம் வைத்திருக்கிறார் என்று காமராஜரை போற்றிய கருணாநிதி குடும்பத்துடன் குலாவும் உங்களுக்குத்தான் அந்த அருகதை உண்டு!
காமராஜரை சிறையிலடைத்து, கொடுமைபடுத்தி, அவர் இறக்கக் காரணமாக இருந்த இந்திராவின் சேவகர்களான உங்களுக்குத்த்தான் அந்த அருகதை உண்டு!
காமராஜர் விருப்பத்திற்கு மாறாக மதுவை தமிழகத்தில் அறிமுகம் செய்த கழகக் கண்மணிகளின் காவலான உங்களுக்குத்தான் அந்த அருகதை உண்டு!
பள்ளிகளைத் திறந்து, மதிய உணவு திட்டத்தை அறிமுகம் செய்துவைத்த காமராஜரை களங்கப்படுத்திப் பேசிய ஊழல் கழகத்தின் கூட்டாளியான உங்களுக்குத்தான் அந்த அருகதை உண்டு!
கல்வியை இலவசமாக ஏழைகளுக்கும் எட்டும் கனியாக பொதுவில் வைத்த காமராஜரின் கொள்கைக்கு மாறாக, அதை வியாபாரப் பொருளாக்கி கொள்ளையடிக்கும் உங்கள் கூட்டங்களுக்குத்தான் அந்த அருகதை உண்டு!
இறக்கும்போது, இரண்டு மூன்று வேட்டிகளை மட்டுமே சொத்தாக விட்டுச்சென்ற காமராஜருக்கு விரோதமாக, ஏழெட்டு தலைமுறைக்குமாக கொள்ளையடித்து சொத்து சேர்த்து வைத்துள்ள உங்களுக்குத்தான் அந்த அருகதை உண்டு!
கடற்கரையில் காமராஜரை அடக்கம் செய்ய அனுமதி மறுத்த கருணாநிதிக்கு, அதே கடற்கரையில் இடம் கேட்டு, நள்ளிரவில் நீதிமன்றத்தை அணுகிய உங்களுக்குத்த்தான் அந்த அருகதை உண்டு!
பொதுநலமே தன்னலமாக வாழ்ந்த காமராஜரைப் புகழ, தன்னலமே பொதுநலமென வாழும் நீங்கள்தான் பொருத்தமான நபர்!!
நீரெல்லாம் காமராஜரைப் புகழ்ந்துதான் அவர் புகழ் இனி வளர வேண்டும் என்றால், அவர் புகழ் மங்கிப்போவதே நன்று!!
No comments:
Post a Comment