காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் தி மு க கொடுத்தது சற்று அதிகம் தான் என்று பரவலாக பேசப்பட்டது. இந்த தேர்தலில் கௌரவமான வெற்றி கிடைக்காவிட்டால் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் செல்லாகாசு ஆகிவிடுவார்கள். டெல்லியிலும் தமிழ்நாட்டிலும் சுத்தமாக மரியாதை போய் விடும். இப்போது பா ஜ க எதிர்ப்பு வாக்கை தி மு க துணை கொண்டு அறுவடை செய்ய முடியவில்லை என்றால் எப்போதும் முடியாது.
இந்த தேர்தல் எடப்பாடி ஸ்டாலினுக்கும் மட்டுமல்லாமல் வைகோ, திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சிகளின் எதிர்காலமும் தீர்மானிக்கும் முக்கிய தேர்தல்.
வெற்றி பெற்றால் தான் மரியாதை கிடைக்கும். மதவாத அரசியலை எதிர்க்கிறோம் என்பது வெற்று கோஷமாகிவிடும்.
மத்திய, மாநில அரசுகளின் எதிர்ப்பு வாக்குகளை கூட்டணி கட்சிகளின் துணை கொண்டு அறுவடை செய்ய முடியவில்லை என்றால் அது அவர்களின் கட்சிகளின் தோல்வியாக கருதப்படாது.
தி மு க வின் தோல்வியாகவே பார்க்கப்படும்.

No comments:
Post a Comment