Thursday, April 18, 2019

இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியே அள்ளும் என்பது என் கருத்து.

நாம் ஆவலோடு எதிர்பார்த்த தேர்தல் நடந்து முடிந்தே முடிந்து விட்டது. என்ன ஆகியிருக்குமோ தெரியவில்லை. இருந்தாலும் தேர்தல் பிரச்சாரம் நடந்த முறை, வேட்பாளர்களின் திறமை, பழைய தேர்தல் முடிவுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு என்னுடைய கணிப்பு இதோ:
அதிமுக கூட்டணி கண்டிப்பாக வெல்லும் தொகுதிகள்:
1. திருவள்ளூர்
2. தென்சென்னை
3. கிருஷ்ணகிரி
4. தர்மபுரி
5. சேலம்
6. நாமக்கல்
7. ஈரோடு
8. திருப்பூர்
9. கோவை
10. பொள்ளாச்சி
11. கருர்
12. தேனி
13. இராமநாதபுரம்
14. தென்காசி
15. திருநெல்வேலி
16. கன்னியாகுமரி.
17. புதுச்சேரி.
18.அரக்கோணம்
19.விழுப்புரம் 
20.ஆரணி
21.திருவண்ணாமலை
இழுபறி, ஆனால் அதிமுக கூட்டணிக்கு வாய்ப்புகள் அதிகம் என்கிற தொகுதிகள்:
1. கள்ளக்குறிச்சி
2. திருச்சி
3. மயிலாடுதுறை.
4. சிவகங்கை.
5. மதுரை.
திருச்சி தொகுதியைப் பொறுத்த வரையில் சாருபாலா இருப்பதால் அவர் முஸ்லீம்களின் ஓட்டை கணிசமாகப் பிரித்து விடுவார் என்று எனக்குத் தோன்றுகிறது. எனவே அதிமுக கூட்டணியின் வெற்றி சாத்தியமாகலாம். மதுரையைப் பொறுத்த வரையில் எதிரணியில் கம்யுனிஸ்ட் வேட்பாளர் என்பதால் அவரின் வெற்றி வாய்ப்பு சற்று குறைவாக இருக்கலாம் என்பது என் கணிப்பு.
மற்ற இடங்களிலெல்லாம் திமுக கூட்டணி வெற்றி பெறலாம் என்பது என் எதிர்பார்ப்பு. இந்தளவு வந்தாலே அது அதிமுகவுக்கு மிகப் பெரிய வெற்றிதான். பார்ப்போம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...