ஆண்டிப்பட்டியில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தேனி லோக்சபா தொகுதியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ்., மகன் ரவீந்திரநாத்குமார், காங்கிரஸ் தரப்பில் இளங்கோவன். அமமுக சார்பில் தங்கதமிழ்செல்வன் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதியில் பணப்பட்டுவாடா நடப்பதாக புகார் எழுந்தது.
பணம் பதுக்கல்
புகாரின் அடிப்படையில் ஆண்டிப்பட்டியில் உள்ள அமமுக அலுவலகத்தில் ரெய்டு நடத்த டிஎஸ்பி., சீனிவாசன் தலைமையிலான பறக்கும் படையினர் ,போலீசார் மற்றும் அதிகாரிகள் சென்றனர். இந்நிலையில் அங்கு இருந்த தொண்டர்கள் போலீசாரை தடுத்ததுடன் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மின்சாரத்தை அணைத்து பணத்தை அள்ளி செல்ல பலரும் முற்பட்டனர்.
இதனையடுத்து போலீசார் வானத்தை நோக்கி சுட்டனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தற்காப்புக்காக வானத்தை நோக்கி சுட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். எஸ்பி., பாஸ்கரன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகிறார்.
No comments:
Post a Comment