துாத்துக்குடியில், தி.மு.க., வேட்பாளர் கனிமொழி வீட்டில், வருமான வரித்துறையினர் நேற்று இரவு திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.துாத்துக்குடி லோக்சபா தொகுதியில், தி.மு.க., வேட்பாளராக, கனிமொழி போட்டியிடுகிறார். நேற்று மாலை, கோவில்பட்டியில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ உள்ளிட்டோர் பங்கேற்ற, இறுதி கட்ட பிரசாரத்தில் பங்கேற்ற பின், துாத்துக்குடி வந்தார்.
துாத்துக்குடி குறிஞ்சி நகரில் வாடகை வீட்டில்,கனிமொழி குடும்பத்தினருடன் தங்கியுள்ளார். நேற்று இரவு, 8:30 மணிக்கு, இந்த வீட்டிற்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள், சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது கனிமொழி, அவரது கணவர் அரவிந்தன் மற்றும் குடும்பத்தினர் இருந்தனர். வீட்டில் இருந்து யாரையும் வெளியே அனுமதிக்க வில்லை; வெளி நபர்களும் உள்ளேஅனுமதிக்கப்பட வில்லை.
சோதனை நடத்துவதை அறிந்த, தி.மு.க., வினர், கனிமொழி வீட்டு முன் கூடி, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அங்கு, போலீசார் குவிக்கப்பட்டனர். இரவிலும் சோதனை தொடர்ந்தது.

ஸ்டாலின் கண்டனம்
திருச்சி விமான நிலையத்தில், தி.மு.க., தலைவர்

ஸ்டாலின் கூறியதாவது:வேலுாரில் தேர்தலை ரத்து செய்தது, ஜனநாயகப்படுகொலை. எந் தெந்த தொகுதியில் எவ்வவு பணம் கொடுத்து உள்ளனர் என, அனைத்து ஊடகங்களுக்கும் தெரியும். ஆனால், அதை நீங்கள் வெளியே சொல்ல மாட்டீர்கள். அது உங்கள் ஜனநாயகம்.
துணை முதல்வர் மகன் போட்டியிடும் தேனி தொகுதியில், ஓட்டுக்கு பணம் கொடுப்பது, வீடியோ ஆதாரமாகவே வந்துள்ளது. இதுவரை நடவடிக்கை இல்லை. ஆனால், தி.மு.க.,வை பழிவாங்க வேண்டும் என்பதற்காக, பிரதமர் மோடி, தேர்தல் ஆணையத்தை பயன்படுத்து கிறார்.
சிறிது நேரத்துக்கு முன் கூட, துாத்துக்குடி, வேட்பாளர் கனிமொழி வீட்டில், வருமான வரித்துறை சோதனை நடக்கிறது. இது யார் கொடுத்த புகார் என தெரியவில்லை.
பா.ஜ., வேட்பாளர் தமிழிசை வீட்டில் கோடி கோடியாய் பணம் வைத்து உள்ளார் என, நான்பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன். அங்கு தேர்தல் ஆணையம் சோதனை நடத்துமா? இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment