Friday, April 19, 2019

அ.ம.மு.க., பொது செயலர் தினகரனுக்கு, 'புரமோஷன்'.

அ.ம.மு.க., கட்சியை, தேர்தல் ஆணையத்தில், பதிவு செய்வதற்கு வசதியாக, கட்சியின் பொதுச் செயலராக, தினகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அ.தி.மு.க.,வில், ஓரம் கட்டப்பட்ட தினகரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பை துவக்கினார். அ.தி.மு.க.,விற்கு சொந்தம் கொண்டாடியதால், அ.ம.மு.க.,வை பதிவு செய்யாமல் இருந்தார்.தள்ளுபடிஆனால், அ.தி.மு.க., மற்றும் இரட்டை இலை சின்னத்தை, ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., அணிக்கு, தேர்தல் ஆணையம் வழங்கியது. 

இதை எதிர்த்து, சசிகலா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இந்நிலையில், அ.ம.மு.க.,விற்கு பொது சின்னம் ஒதுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், 'தேர்தல் ஆணையத்தில், ஏன் கட்சியை பதிவு செய்யவில்லை?' என, நீதிபதிகள் கேட்டனர். விரைவில், கட்சியை பதிவு செய்வதாக, தினகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.பரிந்துரைஇதைத் தொடர்ந்து, லோக்சபா தேர்தலில், அ.ம.மு.க.,விற்கு, பொது சின்னம் வழங்க, தேர்தல் ஆணையத்திற்கு, நீதிமன்றம் பரிந்துரை செய்தது.இதன்படி, லோக்சபா மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில், அ.ம.மு.க., வேட்பாளர்களுக்கு, 'பரிசுப் பெட்டி' சின்னம் ஒதுக்கப்பட்டது. 38 லோக்சபா தொகுதிகளுக்கும், 18 சட்டசபை தொகுதிகளுக்கும், தேர்தல் முடிந்த நிலையில், அ.ம.மு.க.,வை, கட்சியாக பதிவு செய்ய, தினகரன் முடிவு செய்து உள்ளார்.
சென்னையில் நேற்று, அ.ம.மு.க., மாவட்டச் செயலர்கள் மற்றும் தலைமை நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில், கட்சியை முறைப்படி, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய, முடிவு செய்யப்பட்டது. அதற்கு வசதியாக, கட்சியின் துணை பொதுச் செயலராக இருந்த தினகரன், பொதுச் செயலராக தேர்வு செய்யப்பட்டார்.அ.தி.மு.க., தொடர்பான வழக்கில், மேல்முறையீடு செய்ய முடிவு செய்திருப்பதால், சசிகலாவுக்கு எந்தப் பதவியும் வழங்கப்படவில்லை.
இது குறித்து, அ.ம.மு.க., செய்தி தொடர்பாளர், சி.ஆர்.சரஸ்வதி கூறியதாவது:அ.ம.மு.க., துணை பொதுச் செயலராக இருந்த தினகரன், பொதுச் செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். அரசியல் கட்சியாக பதிவுசின்னத்திற்காக, நீதிமன்றம் சென்றபோது, கட்சியை பதிவு செய்வதாக, வழக்கறிஞர்கள் உறுதி அளித்தனர். இதன்படி, கட்சியை பதிவு செய்ய, முடிவு செய்யப்பட்டுள்ளது.கட்சி தலைவராக, சசிகலா, சிறையிலிருந்து வந்ததும், தேர்வு செய்யப்படுவார். அ.தி.மு.க., தொடர்பான வழக்கை, சசிகலா தொடர்வார். இம்மாத இறுதிக்குள், தேர்தல் ஆணையத்தில், அ.ம.மு.க., ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...