Thursday, May 14, 2020

தமிழனின்_அரசியல்_வினோதமானது:

இந்திய மாநிலமான குஜராத்தை சேர்ந்த மோடியை வட இந்தியர் என எதிர்ப்பான்..!
ஆனால் இந்தியரல்லாத இத்தாலியைச் சேர்ந்த சோனியா காந்தியை ஏன் ஆதரிக்கிறீர்கள் என்றால் முழிப்பான்..!
வட இந்தியர்கள் முட்டாள்கள். எனவே பாஜகவின் மோடி அறிவாளி அல்ல என எதிர்ப்பான்..!
காங்கிரஸின் ராகுல் காந்தியும் வட இந்தியர் தானே பின் அவர் மட்டும் எப்படி அறிவாளி என்று கேட்டால் முழிப்பான்..!
டீ வியாபாரம் செய்தவர் பிரதமரா என மோடியை எதிர்ப்பான்..!
சோனியா காந்தியும் கூட இத்தாலியில் ஒரு பாரில் வேலை செய்தவர் தானே என்று கேட்டால் முழிப்பான்..!
நரேந்திர மோடி ஒரு ஆரியர் என எதிர்ப்பான்..!
ராகுல் காந்தி மட்டும் திராவிடரா என்றால் முழிப்பான்..!
மோடி விதவிதமான ஆடைகளை அணிகிறாரே என்று எதிர்ப்பான்..!
அந்த ஆடைகளை ஏலம் விட்டு அதன் மூலம் கிடைக்கும் பெரிய தொகையை தேசத்திற்கு தானே அவர் கொடுக்கிறார் என கேட்டான் முழிப்பான்..!
மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த எளிய குடும்பத்தில் பிறந்த மோடியை மேல் ஜாதியினருக்கு ஆதரவானவர் என கூறி எதிர்ப்பான்..!
கவுல் கோத்திரத்தில் பிறந்த பிராமணர் என ராகுல்காந்தி தன்னைக் கூறிக் கொள்கிறாரே என கேட்டால் முழிப்பான்..!
வெறும் 6 ஆண்டுகளில் மோடி நாட்டுக்கு செய்த பணிகள் போதாது என எதிர்ப்பான்..!
60 ஆண்டுகளில் காங்கிரஸ் திமுக ஆட்சிகள் இந்த அளவுக்குக்கூட செய்யவில்லையே என கேட்டால் முழிப்பான்..!
தொழிலதிபரோ கோடீஸ்வரரோ அல்லாத மோடியை கார்ப்பரேட்டுக்கு ஆதரவானவர் எனக்கூறி எதிர்ப்பான்..!
உண்மையான கார்ப்பரேட் தொழிலதிபர்களாகவும் பெரும் கோடீஸ்வரர்களாக இருப்பது கருணாநிதி, ராகுல்காந்தி, சிதம்பரம் ஆகியோர் குடும்பம் தானே எனக் கேட்டால் முழிப்பான்..!
இலங்கையில் தமிழர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்த, இலங்கை கடற்படையால் மீனவர் படுகொலையை தடுத்த மோடியை தமிழ் மக்களுக்கு எதிரானவர் என்று கூறி எதிர்ப்பான்..!
இலங்கையில் இறுதிக்கட்ட போரில் ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்று குவிக்க காரணமான காங்கிரஸ் திமுக கூட்டணியை ஆதரிக்கிறாயே என்று கேட்டால் முழிப்பான்..!
தமிழனை குறைகூறிப் பயனில்லை..! ஏனென்றால் திமுகவும் திமுக ஆதரவு ஊடகங்களும் சேர்ந்து தமிழனுக்கு மோடியை எதிர்க்க மட்டும்தான் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்..!
ஏன் எதிர்க்கிறோம் என்று தெரியாமலேயே அவனும் எதிர்த்தான்..! எதிர்க்கிறான்..! எதிர்ப்பான்..!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...