Saturday, May 9, 2020

ஒரு #சின்ன ஆனா #பெரிய_கதை...

சிரிப்பே வரலைனாலும் பெரிய மனசு வச்சு மன்னிச்சு விட்டுடுங்க...😌😁😁
🌴 *இரண்டு சின்ன பசங்க,*
ஒரு கூடை நிறைய ஆரஞ்சுப் பழங்களை எடுத்துட்டு ஓடி வந்தாங்க.
🌻ஒரு அமைதியான இடத்துக்கு போய்
இரண்டுபேரும் அதை பங்கு போட்டுக்க நினைச்சாங்க.
🌻பக்கத்துல உள்ள
சுடுகாட்டுக்கு போவோம்னு
ஒருத்தன் சொன்னான்.
🌻சுடுகாட்டின் கேட் பூட்டி இருந்துச்சு....
கேட் மேல ஏறி உள்ள குதிச்சாங்க.
🌻அப்படி குதிக்கும்போது
ரெண்டு ஆரஞ்சுப்பழம் மட்டும்
கீழ விழுந்துடுச்சி.
கூடைல நிறைய பழம் இருந்ததுனால, அதை அவங்க கண்டுக்கல.
🌻கொஞ்சநேரம் கழிச்சி சுடுகாடு வழியா *ஒரு குடிகாரன் வந்தான்.*
🌻அவன் உள்ள இருந்த சத்தத்த கேட்டு அங்கேயே நின்னுட்டான்.
*"உனக்கொன்னு, எனக்கொன்னு"*
*"உனக்கொன்னு, எனக்கொன்னு"*
*''உனக்கொன்னு, 'எனக்கொன்னு"*
🌻இதை கேட்ட அவனுக்கு
போதை மொத்தமும் தெளிஞ்சிடுச்சி..
🌻அவன் பயந்து போய் அங்கிருந்து விழுந்தடிச்சி ஓடினான்.
🌻அவன் போற வழியில
ஒரு மரத்தடியில சாமியார் ஒருத்தர்
தவம் பண்ணிக்கிட்டு இருந்தார்.
🌻இவன் உடனே
அங்க இருந்த சாமியார் கிட்ட விஷயத்தைச் சொன்னான்.
🌻"சாமி!
தயவு செய்து என் கூட வாங்க.
*கடவுளும், சாத்தானும்* சுடுகாட்டுல பிணங்கள பங்கு போடுறத காமிக்கிறேன்."
🌻சாமியார்க்கு ஒன்னும் புரியல.
ஆனாலும்
அவன் ரொம்ப கெஞ்சி கூப்பிட்டதால
அவன் கூட போனாரு.
🌻அவங்க கேட் கிட்ட வந்து
கேட்ட திறக்கும் முன்...
🌻இப்பொழுதும் சுடுகாட்டுல இருந்து மறுபடியும் அதே சத்தம் வந்துச்சு..
*"உனக்கொன்னு, எனக்கொன்னு"*
*''உனக்கொன்னு, 'எனக்கொன்னு"*
🌻திடீர்ன்னு சத்தம் நின்னுடுச்சி.
ஆனா, ஒரு சத்தம் தெளிவா கேட்டது.
🌻 *"ஆமா! கேட்ல இருக்குற இரண்டு யாருக்கு?"*
*"எனக்கு."*
*"இல்ல..இல்ல. எனக்குத்தான்."*
*"சரி நீயே அதை உரிச்சு தின்னு"*
அவ்வளவுதான்..
🌻"நாங்க இன்னும்
சாகல. நாங்க இன்னும் சாகலை"ன்னு அலறிக்கிட்டே,
*சாமியாரும், குடிகாரனும்* விழுந்தடிச்சிக்கிட்டு ஓடிட்டாங்க...
🌹 *கொரானா நினைப்புலேயே*
இருக்காதீங்க. .....
*ரிலாக்ஸா கொஞ்சம் சிரிக்கலாமே.....*
சிரிப்போடு மகிழ் மதிய வணக்கம்..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...