தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும், டீக்கடை முதல், அனைத்து வகை கடைகளையும் திறக்க, அரசு பச்சைக்கொடி காட்டியுள்ளது. கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக, அரசுக்கு நிதி ஆலோசனை வழங்க, உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் மட்டத்தில் நடந்த, நீண்ட விவாதத்திற்கு பின், இதற்கான உத்தரவுகளை,முதல்வர் இ.பி.எஸ்., பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில், ஊரடங்கு அமலில் இருந்தாலும், தமிழக அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவுரைகளின் அடிப்படையில், சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக, தமிழகம் முழுதும், நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர, மற்ற பகுதிகளில், நாளை முதல், சில பணிகள் குறிப்பிடப்பட்ட நேரத்தில் செயல்பட, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, தலைமை செயலகத்தில் நடந்த, அதிகாரிகள் மட்ட ஆலோசனைக்கு பின், இந்த அனுமதி உத்தரவுகளை, முதல்வர் பிறப்பித்துள்ளார்.
அதன் விபரம்:
* காய்கறிகள், மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், காலை, 6:00 முதல், இரவு, 7:00 மணி வரை செயல்படும்
* பிற தனிக் கடைகள், சென்னை காவல் துறை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், காலை, 10:30 முதல், மாலை, 6:00 மணி வரை செயல்படும். மற்ற பகுதிகளில், காலை, 10:00 முதல், இரவு, 7:00 மணி வரை செயல்படும்
* பெட்ரோல் பங்க், சென்னை காவல் துறை எல்லை பகுதிகளில், காலை, 6:00 முதல், மாலை, 6:00 மணி வரை; மற்ற பகுதிகளில் காலை, 6:00 முதல், இரவு, 8:00 மணி வரையும் செயல்படும்
* தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள, பெட்ரோல் பங்க், 24 மணி நேரமும் செயல்படும்.
அரசால், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட அனைத்து தளர்வுகளும், தடைகளும், மறு உத்தரவு வரும் வரை, தொடர்ந்து முழுமையாக கடைப்பிடிக்கப்படும்.

சலுான் திறக்க தடை:
சலுான், முடி திருத்தகம், அழகு நிலையம் போன்றவற்றை, நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் திறக்க, தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நகர்ப்புறங்களில், வணிக வளாகங்கள் திறக்க, தடை விதிக்கப்படடுள்ளது. நகர்ப்புறங்களில், எந்தெந்த கடைகளை அனுமதிக்கலாம் என்பதை, மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி கமிஷனர்கள் முடிவு செய்வர் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்மட்டக் குழு:
மேலும் ஊரடங்கிற்கு பின், தமிழக பொருளாதாரத்தை மீட்டெடுக்க, பொருளாதாரம் மற்றும் நிதி மேம்பாட்டிற்கான முடிவுகளை எடுப்பது குறித்து, அரசுக்கு ஆலோசனைகள் வழங்க, ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரங்கராஜன் தலைமையில், உயர்மட்டக் குழு அமைத்து, அரசு உத்தரவிட்டுள்ளது.
குழு உறுப்பினர்களாக, ஓய்வுபெற்ற முன்னாள் தலைமை செயலர் நாராயணன், சென்னை பல்கலை துணை வேந்தர் துரைசாமி, வேளாண் பல்கலை துணை வேந்தர் குமார் உள்ளிட்ட, 24 பேர் இடம் பெற்றுள்ளனர்.
* இக்குழு, தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு, வர்த்தக சங்கங்கள், தொழில் அதிபர்கள், பொருளாதார நிபுணர்கள் ஆகியோரின் கருத்துக்களை கேட்டறியும். ஊரடங்கால், பொருளாதாரம் உட்பட அனைத்து துறைகளில் ஏற்பட்டுள்ள தாக்கங்களில் இருந்து விடுபட, ஆலோசனைகள் வழங்கும்
* உள்கட்டமைப்பு திட்டங்கள், சிறு, குறு தொழில் மேம்பாடு போன்றவற்றுக்கு, நிதி ஆதாரங்களை கண்டறியும்
* பொருளாதாரத்தை மேம்படுத்த, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை ஆய்வு செய்து, மூன்று மாதங்களுக்குள், அரசுக்கு அறிக்கை அளிக்கும்.

டீக்கடைகள் நாளை திறப்பு:
சென்னை உட்பட, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும், நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர்த்து, மற்ற பகுதிகளில், டீக்கடைகள், நாளை காலை, 6:00 முதல், இரவு, 7:00 மணி வரை செயல்பட, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், 'பார்சல்' சேவைக்கு மட்டும் அனுமதிக்கப்படுகிறது. டீக்கடைகளில், சமூக இடைவெளியை, தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். தினமும், ஐந்து முறை, கிருமி நாசினி தெளித்து, கடையை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.கடையில், வாடிக்கையாளர்கள் நின்றோ, அமர்ந்தோ, டீ குடிக்க அனுமதி இல்லை. இதை முறையாக கடைப்பிடிக்க தவறும், டீக்கடைகள் உடனடியாக மூடப்படும்.
தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதி:
சென்னை, காவல் துறை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள, அனைத்து தனியார் நிறுவனங்கள், 33 சதவீத பணியாளர்களுடன், காலை, 10:30 முதல், மாலை, 6:00 மணி வரை செயல்படலாம்.மற்ற பகுதிகளில், அனைத்து தனியார் நிறுவனங்களும், 33 சதவீத பணியாளர்களுடன், காலை, 10:00 முதல், இரவு, 7:00 மணி வரை செயல்படலாம். இந்நிறுவனங்களில், நோய் தடுப்பு வழிமுறைகள் தீவிரமாக கடைப்பிடிக்கப்படுவதை, அனைத்து மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி கமிஷனர்கள், காவல் துறையினர் கண்காணிக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment