Monday, May 11, 2020

கம்யூனிசம்னா என்ன?

குட்டிக் கதையா சொல்வோம்.
ரஷ்ய வீதியில் கையில் இரண்டு கோழிகளுடன் ஓரு கம்யூனிஸ்ட் நடந்து வருகிறார்.

அப்போது எதிர் திசையில் வந்த நபர் காம்ரேட் வணக்கம் என்கிறார். இவரும் சந்தோஷமாக வணக்கம் என்கிறார்.
நீங்கள் கம்யூனிஸ்ட்டா?
எதிரில் வந்தவர் கோழியுடன் வந்தவரைப் பார்த்து வினவுகிறார்.
ஆம். நிச்சயமாக. நான் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர். பொறுப்பிலும் இருப்பதாக கோழியுடன் வந்த காம்ரேட் பெருமையாக கூறினார்.
எதிரில் வந்தவருக்கு பரம சந்தோஷம். கேள்விகளை கேட்க ஆரம்பித்தார்.
வழிபோக்கர்: காம்ரேட் உங்களிடம் இரண்டு பங்களாக்கள் இருந்தால் ஒன்றை இல்லாதவருக்கு கொடுத்துவிடுவீர்களா?
காம்ரேட்: நிச்சயமாக. நான் கம்யூனிஸ்ட்காரன். அப்படித்தான் செய்வேன்
வழிபோக்கர் : அருமை காம்ரேட். உங்களிடம் இரண்டு வண்டிகள் இருந்தால் அதில் ஒன்றை இல்லாதவருக்கு கொடுப்பீர்களா?
காம்ரேட்: நிச்சயமாக. நான் கம்யூனிஸ்ட்காரன். அப்படித்தான் செய்வேன்.
வழிபோக்கர் : உங்கள் கையில் இரண்டு கோழிகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றை எனக்குத் தருவீர்களா?
காம்ரேட்: அதெப்படி முடியும் என்கிட்ட இருப்பதே இந்த இரண்டு கோழிகள் மட்டும்தானே! நானெப்படி தருவேன்.
இவ்வளவுதாங்க.
தன்னிடம் இல்லாத ஒன்றை தருவதாக படம் போடுவதே கம்யூனிஸம். இருப்பதைக் கேட்டுப் பாருங்கள். அடிக்கவே வந்துவிடுவார்கள்.
அறிவுரையெல்லாம் அடுத்தவனுக்கு சொல்லிவிட்டு தன்னுடைய கல்லாப்பெட்டியை பத்திரப்படுத்துவதே இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட்டுகளின் பாழாய்ப் போன கொள்கை.
கதை முடிந்தது லைக்க போட்டுட்டு போங்க.
😁😁😁

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...