இன்றைய நிலையில் இந்தியா சீனா இடையிலான முழு அளவு யுத்தம் என்பது இரண்டு நாடுகளுக்கும் பொருளாதார நிலையில் மிகப்பெரிய பேரழிவை உண்டாக்கும். கொரோணா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார இழப்பில் இருந்து மீண்டு வரவே இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என்கிற நிலையில் உலகில் சற்றேறக்குறைய 50 சதவீத மக்கள் தொகை உள்ளடக்கிய இரு நாடுகளும் போர் புரிவது என்பது மிகப் பெரும் சீரழிவை உருவாக்கும்.
தற்போதைய நிகழ்ச்சிகள் சீனாவின் மன நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி இந்தியாவை சரிசமமாக நண்பனாக பாவித்து எல்லை பிரச்சனைகளை நியாயமான பேச்சுவார்த்தையின் மூலமே தீர்க்க இயலும் என்கிற மனோபாவத்தை ஏற்படுத்தினால் நன்மை எனக் கருதுகிறேன்.
இன்றைய நிலையில் ராணுவத்திற்கான செலவுகளை குறைத்து சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றிற்கு அதிகமாக செலவிட வேண்டிய நிலையில் நாடுகள் உள்ளன. ஆகவே இருபுறமும் கோபப்படுத்தும் அறிக்கைகளை தவிர்த்து நேர்மையாக சிந்தித்து உலக நலன் கருதி சுமூகமாக பேசி போரை தவிர்ப்பதே சரியான நடைமுறையாகும்.
சீனாவும் இந்தியாவைப் போன்று உலகத்தின் மிகப்பழமையான கலாச்சாரம் கொண்ட நாடாகும்.நம்மைப் போன்றே பலரின் படையெடுப்புகளில் மிகவும் பாதிப்படைந்த நாடாகும்.
சீனா தனது நல்லெண்ணத்தை காட்டும் வகையில் இந்தியா ஐக்கிய நாடுகள் சபையில் நிரந்தர உறுப்பினராக வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது. மேலும் இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகப் பற்றாக்குறை நீக்கப்பட்டு ஒரு நேர்மையான வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட வேண்டும். மேலும் சீனா தனது பாகிஸ்தான் தீவிரவாத ஆதரவு நிலையை முழுமையாக கைவிட வேண்டும்.
இவையெல்லாம் நடந்தால் ஆசியா உலகத்தின் தலைவன் ஆக அமையும் என்று ஆசைப்படுகிறேன். நடக்க வேண்டும் என்று நம்புகிறேன். நமது பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கைகள் முதல் முறையாக சீனா இந்தியாவை சற்று கீழ் நிலை கண்ணோட்டத்தில் பார்ப்பதை மாற்றி உள்ளதாகவே கருதுகிறேன். இந்தியாவின் ராணுவ பலம் தனக்கு நிகரானது என்கிற எண்ணத்தை உருவாக்கி சற்று அச்சப்பட வைத்தது ஆகவே கருதுகிறேன்.

No comments:
Post a Comment