Monday, July 6, 2020

சஷ்டி விரதம்.

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது பழமொழி. இது தவறானது. சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது தான் உண்மையான பழமொழி.
அதாவது, சஷ்டி விரதம் இருந்தால் திருமணம் முடிந்து குழந்தை பாக்கியத்திற்காக காத்திரு க்கும் பெண்ணின் அகப்பையாகிய கருப்பை யில் குழந்தை வளரும் என்பது இதன் பொருள்.

சஷ்டி விரதத்திற்கு அத்தகைய வலிமை உண்டு. சஷ்டி விரதம் என்பது மிகப்பெரிய விரதம். திதிகளின் வரிசையில் சஷ்டி ஆறாவதாக வருவதால் அதற்கு மிகப்பெரிய வலிமை உண்டு. ஐஸ்வரியத்தை தரக்கூடியது 6 என்ற வழக்கு ஜோதிடத்தில் உள்ளது. ஜோதிடத்தில் 6-ம் எண்ணுக்கு உரிய கிரகம் சுக்கிரன். இவர் லட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறார்.
திருமணம், வாகனம், வீடு ஆகியவற்றை தரக்கூடியவரும் சுக்கிரன் தான். எனவே சஷ்டி திதியில் விரதம் இருந்தால் வேண்டிய அனைத்தையும் பெறலாம். 16 பேறுகளில் ஒன்றாகவே குழந்தைப்பேறு கருதப்படுகிறது. எனவே குழந்தைப்பேறுடன் மீதமுள்ள 15 பேறுகளையும் அளிக்கும் வல்லமை சஷ்டி விரதத்திற்கு உண்டு.
இதன் காரணமாக குழந்தைப்பேறு இல்லாதவ ர்கள் மட்டுமே சஷ்டி விரதம் மேற்கொள்ள வேண்டும் எனக்கூறுவது தவறு. சஷ்டி விரத நாட்களில் சிரத்தையாக இருந்து விரதம் மேற்கொள்பவர்கள் யாராக இருந்தாலும் அனைத்து சிறப்பையும் பெற முடியும்.
சஷ்டி விரதத்தை கடைப்பிடிப்பது எப்படி:
*******************************************
ஒவ்வொரு மாதத்திலும் சுக்கில பட்சத்தில் வரும் பிரதமை தொடங்கி சஷ்டி வரை 6 நாட்கள் தொடர்ந்து விரதம் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு நாளும் அதிகாலை எழுந்து, குளித்து முருகனை மனமுருகி வணங்க வேண்டும்.
பூரண கும்பத்தில் தண்ணீர் நிரப்பி மாவிலை வைத்து, தருப்பையை வரிசையாக வைத்து சந்தனமும், அட்சதையும் இட்டு முருகனை அதில் ஆவாகனம் செய்து மலரிட்டு தீபம் காட்டி வழிபடுவது நல்லது.
சஷ்டி விரத நாட்களில் பகலில் தூங்குதல் கூடாது. சஷ்டி தினத்தன்று இரவிலும் விழித்து இருப்பது கூடுதல் பலன்களை தரும்.
முருகனை ஆறு காலமும் பூஜை செய்ய வேண்டும். 6 நாட்களும் கந்தனின் சரித்திரங் களையும், சிறப்புகளையும், திருவிளையாடல் களையும், முருகன் செய்த அற்புதங்களையும் கேட்க வேண்டும்.
திருப்புகழ் பாராயணம் செய்ய வேண்டும். எந்த அளவுக்கு பாராயணம் செய்கிறோமோ அந்த அளவுக்கு முருகனை நெருங்க முடியும்.
பிரார்த்தனை, பாராயணம் நேரம் தவிர கூடுதல் நேரம் கிடைத்தால் அந்த சமயத்தை வீணாக்காமல் முருகனை மனதில் நிலை நிறுத்தி தியானம் செய்யலாம்.
இதே விரதத்தை ஒவ்வொரு மாதமும் சஷ்டி விரத சமயத்தில் கடைபிடிக்கலாம்..சஷ்டி விரதம் இருப்பவர்களது வினைகள் வெந்து சாம்பலாகி விடும். விரதத்தை கடைபிடிக்க பக்தர்களுக்கு எண்ணிய நலமும், புண்ணிய பலமும் கிடைக்கும்..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...