Wednesday, July 8, 2020

மன்னர்மன்னன் ... #இரங்கல்_பதிவு ....

புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்தபோது புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் புதல்வர் கோபதியும் பாரதிதாசனிடம் மாணவராக சேர்ந்த விஜயரங்கமும் இளம்வயதில் அங்கே வாழ்ந்தனர்.
அவர்கள் பிரஞ்சு ஆதிக்கத்திற்கு எதிராக இளம் வயதிலேயே கையெழுத்துப் பத்திரிகையை நடத்தினார்கள்.
அந்தப் பத்திரிகை தமிழில் வெளிவந்தது .
இதனை பிரஞ்சு அரசாங்கம் தடை செய்தது.
இதனால் கோபதியும் விஜயரங்கமும் காவலர்களால் பிடித்துச் செல்லப்பட்டனர்.
அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தபோது இருவருக்கும் 18 வயதுக்கும் குறைவாக இருந்ததால் அவர்கள் எச்சரித்து அனுப்பப்பட்டனர் .
 பிறகு வீடு திரும்பிய கோபதி விஜயரங்கம் ஆகியோரிடம் தகவலை விசாரித்து அறிந்த பாரதிதாசன் மாற்று யோசனையை தெரிவித்தார் .
அரசுக்கு எதிராக ரகசியப் பத்திரிகை நடத்தும்போது உண்மையான முகவரியை கொடுக்கக்கூடாது ;
இயற்பெயரை பத்திரிகைகளில் வெளியிட கூடாது என்று கூறினாராம் .
இதன் பிறகு கோபதியை அழைத்து நீ இனிமேல் ‘ மன்னர் மன்னன்’ என்று பெயர் வைத்துக் கொள் என்று கூறி இருக்கிறார்.
ஆனால் விஜயரங்கத்துக்கு எந்த பெயரையும் வைக்கவில்லை.
இதன் பிறகு மன்னர் மன்னனான கோபதி விஜயரங்கம் என்ற தனது நண்பருக்கு ‘தமிழ்ஒளி’ எனப் பெயர் வைத்துள்ளார் .
இந்தப் பெயர்தான் இன்றும் நிலைத்து நீடிக்கிறது.
பொதுவுடமைச் சிந்தனைக்கும் சீர்திருத்த கருத்துக்களுக்கும் ஒளி சேர்ப்பவராக தமிழ்ஒளியை உலவவிட்டுக் கொண்டிருக்கிறது .
மன்னர்மன்னன் மிகச்சரியாகவே பெயரைத் தேர்ந்தெடுத்துள்ளார் என்பது விளங்கும்.
மிகவும் தொலைநோக்குப் பார்வை கொண்ட மன்னர் மன்னன் இன்று நம்மிடையே இல்லை .
அவரது மறைவு தமிழ் உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...