Wednesday, July 8, 2020

No doubt sadly but benefits yes - coverting as political score.

வழக்கமாக உள்ளூர் #காவல்துறை மீது நம்பிக்கையின்றிதான் சிபிஐ விசாரணை கேட்பார்கள்.
அதை காங்கிரஸ் அழகிரியும் கேட்டும் விட்டார்.
இப்போது அரசு வழக்கை சிபிஐ க்கு மாற்றியதும் கமல் போன்றவர்கள் குதிப்பது காமெடி.
ரத்ததின ஈரம் காயாமல் இருக்கும் போதே என்ன கண்டு பிடிக்க முடியும்?
கைது எந்த குற்றத்தின் கீழ் போட்டுள்ளார்கள்?
ஸ்டேஷனில் அடித்தார்கள். #CCTV எங்கே?
#மாஜிஸ்டிரெட் டிடம் அழைத்து சென்றார்களா?
எந்த மாஜிஸ்டிரெட்?
அவர் கைதிகளை பார்த்தாரா? விசாரித்தாரா?
அப்போது கைதிகளின் நிலை என்ன?
#மருத்துவரிடம் அழைத்து சென்றார்கள்?
அவர் யார்?
அவர் கைதிகளை பார்த்தாரா?
அப்போது கைதிகளின் நிலை என்ன?
அவர் என்ன சான்றிதழ் கொடுத்தார்?
54 கிமீ இருக்கும் தூத்துக்குடிக்கு கொண்டு செல்லாமல் 115 கிமீ தூரத்தில் இருக்கும் கோவில்பட்டி சிறைக்கு கொண்டு சென்றது ஏன்?
சிறைக்கு வரும் போது கைதிகள் நிலை என்ன?
யார் அழைத்து வந்தார்கள்.?
எங்கு எப்படி (தனிசிறை) அடைக்கப் பட்டார்கள்?
அங்கு அவர்கள் கூட மேலும் கைதிகள் இருந்தார்களா?
சிறையிலும் கைதிகள் தாக்கப் பட்டார்களா?
இறந்தது எப்படி?
CCTV காட்சிகள் இருக்கிறதா?
கேள்விகள். கேள்விகள்.
இத்தனை கேள்விகளுக்கும் பதில் கண்டு புடிப்பது பெரிய கம்ப சூத்திரம் அல்ல.
ஒரு வாரத்தில் கண்டுபிடித்து அறிக்கை சமர்பிக்க முடியும். உண்மையில் நினைத்தால் வெறும் 48 மணி நேரம் போதும்.
ஆனால் என்ன நடக்கும்?.
CBI விசாரணை என்றால் முதலில் இந்த வழக்கை எடுத்துக் கொள்ளுங்கள் என்று இந்த அரசு கடிதம் எழுதும். (10 நாள்)
அதை பெற்றுக் கொண்டேன் என்று அவிய்ங்க கடிதம் எழுதுவார்கள். (10 நாள்).
அடுத்து இந்த வழக்கை விசாரிக்க ஆளை தேடுவார்கள்- 15 நாள்.
அடுத்து அந்த அதிகாரிக்கு ஆணை வழங்குவார்கள். - 10 நாள்.
அடுத்து அவர் பதவியேற்று அதை தமிழக அரசுக்கு தெரிவிப்பார்கள். 5 நாள்.
அடுத்து அவர் தான் பார்க்க வேண்டிய பேப்பர்கள், மற்றும் அறிக்கைகள் பற்றி கடிதம் எழுதுவார். - 15 நாள்.
மூச்சு வாங்குதா? இருங்க.. இப்பதானே ஆரம்பிச்சு இருக்கோம். .. இப்பவே 4 மாதம் ஓடிவிடும்.
அதுக்குள்ள நாம் வேறு பிரச்சனை பக்கம் திரும்பி போயிருப்போம். அந்த இன்ஸ்பெக்டர், எஸ். ஐ. மருத்துவ சான்றிதழ் அளித்த டாக்டர் பணி மூப்பு அடையலாம். இறக்கலாம். வெளிநாடு செல்லலாம்.
மாஜிஸ்டிரெட் பதவி உயர்வு பெற்று மாவட்ட நீதிபதியாகலாம். இல்லை ஓய்வு பெறலாம். அல்லது இறக்கலாம்.
இத்தனை "லாம்"களை தாண்டி நீதியாவது வெங்காயமாவது ?
காவல்துறை சீரமைப்பு ஒன்று மட்டுமே இந்த துறையில் பணி புரிபவர்களுக்கும் அவர்களால் பாதுகாக்கப் பட வேண்டிய பொது மக்களுக்கும் நல்லது.

பி.கு:- ஒவ்வொரு கஸ்டடி மரணத்திலும் இது போல பல தலைகள் ஒன்றாகத்தான் குற்றத்தை மறைக்க பார்க்கின்றன.
இத்தனை பேரையும் சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ். ஐ. கள் ஏமாற்றினார்கள் என்றால் அவர்கள் உலக மகா கில்லாடிகள் என்று அறிக.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...