Wednesday, December 2, 2020

*கடவுளை எப்படி வணங்க வேண்டும்*

 மும்முர்த்திகளை வணங்கும்போது, தலைக்கு மேல் ஒரு அடி தூரம் உயர்த்திக் கும்பிட வேண்டும். மற்ற கடவுள்கள்களுக்கு தலையின் மேல் கைகூப்பி வணங்க வேண்டும்.

குருவை வணங்கும்போது நெற்றியில் கைகூப்பி வணங்க வேண்டும். அரசர், அதிகாரி, தந்தை இவர்களை வணங்கும்போது வாய்க்கு நேராக கைகூப்பி வணங்க வேண்டும்.
அந்தணரை வணங்கும் போது மார்பில் கைகூப்பி வணங்க வேண்டும். தாயை வணங்கும் போது வயிற்றில் கைகூப்பி வணங்க வேண்டும். தாய், தந்தை, குரு, தெய்வங் களுக்கு மட்டும் அஷ்டாங்க வணக்கம் செலுத்தலாம்.
நமஸ்காரம் என்பது பகவானுக்கும், பெரியோருக்கும் செய்யப்படும் மரியாதைக்கான காரியம். இதை மிகவும் வினயத்தோடும், பக்தி பூர்வமாகவும் செய்யச் சொல்லி இருக்கின்றனர். நமஸ்காரம் என்பதை எட்டு அங்கங்களும் பூமியில் படுகிற மாதிரி செய்ய வேண்டும்.
சிலர் சைக்கிளில் போகும்போதே கோவில் வாசலை பார்த்து, ஒற்றைக் கையால், “குட்மார்னிங்’ சொல்வது போல், கையை நெற்றியில் வைத்து விட்டுப் போவது உண்டு. இதெல்லாம் நமஸ்காரத்தில் சேர்த்தியே இல்லை.
“ஏதோ பிள்ளையாண்டானுக்கு சாமி கும்பிட வேண்டுமென்று தோன்றியதே… அதுவே பெரிய பாக்கியம்…’ என்று வேண்டுமானால் மற்றவர்கள் திருப்திபட்டுக் கொள்ளலாம். ஸ்த்ரீகள், திருமாங்கல்யம் கீழே தரையில் படக்கூடாது என்பதற்காக மண்டியிட்டு நமஸ்காரம் செய்யச் சொல்லி இருக்கிறது.
பகவானை வணங்கும் போது விபூதி இட்டுக் கொள்வது முக்கியம்; மற்றொன்று, ருத்ராட்சம் அணிந்து கொள்வது. இதுவும் ரொம்ப விசேஷம். இது, பரமேஸ்வரனின் மூன்றாவது கண்ணாக சொல்லப்பட்டுள்ளது. ருத்ராட்சம் அணிந்தவரை எமதூதர்கள் அண்டமாட்டார்களாம்.
எமதூதர்கள் அண்டமாட்டார்கள் என்றால், எமதூதர்கள் கடைசி காலத்தில் கத்தி, கம்பு, தடி, ஈட்டியுடன் வரமாட்டார்கள்; திவ்ய தேகத்துடன் கூடிய பூத கணங்கள் வந்து அழைத்துச் செல்வராம்.
அடுத்து, வாக்கால் பஞ்சாட்சர ஜெபம் செய்த படி, வில்வத்தால் சிவார்ச்சனை செய்தால், சிவானுக்ரகம் பெறலாம் என்று உள்ளது. சிவானுக்ரகம் ஏற்பட்டால் எல்லா, ஐஸ்வர்யங்களும் பெற்று மோட்ச சாம்ராஜ்ஜியமும் கிடைக்குமாம்!
“விபூதிர் பூதிரைச்வர்யம்’ என்பதால் விபூதி இட்டுக் கொண்டால் ஐஸ்வர்யம் கிடைக்குமாம். ஒரு வில்வ தளத்தைப் போட்டால் மோட்ச சாம்ராஜ்ஜியமே கிடைக்கிறதாம். பரமேஸ்வரனுக்கு விலை உயர்ந்த புஷ்பங்களைக் கொண்டு வந்து பூஜிக்க வேண்டும் என்பதே இல்லை; தெருவெல்லாம் காணப்படும் தும்பைப் பூ, எருக்கம் பூ இவைகளை அர்ப்பணம் செய்தாலே அவன் மகிழ்ந்து போகிறான்.
இப்படி தினமும் செய்ய முடியாதே என்றும் தோன்றலாம். பரவாயில்லை, சிவராத்திரி, பிரதோஷம் போன்ற காலங்களிலாவது செய்தாலும் போதும்; தினசரி சிவநாமம் சொன்னாலும் போதும். ஏதாவது ஒரு விதத்தில் அவனது தொடர்பு இருந்தாலே போதும்!
விபூதி மகிமை, ருத்ராட்ச மகிமை, துளசி மகிமை என்றெல்லாம் தனித்தனியாக உள்ளது. அதையெல்லாம் கொஞ்சமாவது தெரிந்து வைத்துக் கொண்டால் நல்லது! சிவநாமம் மங்களத்தைத் தரும்!
கடவுளை வணங்குவதை வெறும் சம்பிரதாயமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஏதோ கோவிலுக்கு போனோம். சாமியைக் கும்பிட்டோம் என்று கடமையாகவும் எடுத்துக் கொள்ளக்கூடாது.
எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்குமுறை உள்ளது. கோவிலுக்குச் சென்று கும்பிடுவதில் அப்படி என்ன ஒழுங்குமுறை உள்ளது என்று பார்ப்போமா…?
* மூலவர் மற்றும் அம்மன் போன்ற திருவுருவங்களுக்கு அபிஷேகம் செய்யும்போது உட்பிரகாரத்தில் வலம் வரக்கூடாது.
* அஷ்டமி, நவமி, அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, சோமவாரம், சதுர்த்தி போன்ற நாட்களில் வில்வ இலை பறிக்கக்கூடாது. இதற்கு முந்தைய நாள் மாலையிலேயே இதைப் பறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* மேலே துண்டு போட்டுக் கொண்டு சுவாமி தரிசனம் செய்யக்கூடாது.
* கொடி மரம், நந்தி, கோபுரம் இவற்றின் நிழலை மிதிக்கக்கூடாது.
* விளக்கில்லாதபோது இருட்டில் வணங்கக்கூடாது.
* தகாத வார்த்தை மற்றும் எதிர்மறை சொற்களை பேசக்கூடாது.
* கோவிலுக்குள் தூங்கிவிடக்கூடாது. கோவிலுக்குச் சென்று வீடு திரும்பியதும், கால்களைக் கழுவக்கூடாது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...