மத்திய அரசின் வசம் இருக்கும், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின், 52.98 சதவீத பங்குகளை வாங்குவதற்கு, இதுவரை மூன்று நிறுவனங்கள், ஆர்வம் காட்டியிருப்பதாக, பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், எந்தெந்த நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்க, தங்கள் விருப்பத்தை தெரிவித்து
உள்ளன என்பது குறித்த தகவலை, அவர் வெளியிடவில்லை. கடந்த மாதம், 18ம் தேதியன்று, வேதாந்தா நிறுவனம், ஏலத்தில் பங்கேற்க இருப்பதாக, வெளிப்படையாக அறிவித்து விட்டது.
மீதி இரு நிறுவனங்களும், உலகளாவிய பண்டு நிறுவனங்கள் என்கிறார்கள். மேலும், அவற்றில், அப்போலோ குளோபல் மேனேஜ்மென்ட் நிறுவனமும் ஒன்று என கூறப்படுகிறது.
No comments:
Post a Comment