உங்கள் எதிரிகளிடம் பாராட்டு பெறவேண்டும் என ஆசைபடாதீர்கள். அவர்களை இம்ப்ரஸ் செய்ய எதையும் செய்யாதீர்கள்.
குறிப்பாக உங்கள் மேல் ஆழ்ந்த வெறுப்புடன் இருப்பவர்கள்,
உங்களை அவமானபடுத்துபவர்கள், நீங்கள் அழியவேண்டும் என நினைப்பவர்கள்...
எதை செய்தும் இவர்களின் நட்பை பெறமுடியாது,
இவர்களை திருத்த முடியாது..
அவர்கள் உங்கள் முன்னாள் நண்பர்கள், உறவுகளாக இருந்தாலும் சரி.
சுத்தமாக விலகி இருப்பதே சரியானது.
"அவனுக்கு நான் யார் என் நிருபித்து காட்டுகிறேன்,
அவனை வாயடைக்க வைக்கிறேன், அவன் கண்முன் நல்லா இருந்து காட்டுகிறேன்.."
அவசியமே இல்லை.
உங்களுக்காக நன்றாக வாழுங்கள். அவனுக்காக/அவளுக்காக அல்ல.
இதில் வீணாகும் நேரத்தை, முயற்சியை உங்கள் நண்பர்களுக்கும், குடும்பத்துக்கும் நல்லது செய்ய பயன்படுத்துங்கள்....
நமக்கு கெடுதல் நினைக்காமல் இருக்கும் எதிரிகளின் சின்ன சின்ன மனஸ்தாபங்களை சரிப்படுத்துவது வேறு.
ஆனால் நாம் அழியவேண்டும் என நினைப்பவர்கள், மனதில் கடுமையான பொறாமையுடன் இருப்பவர்களை முற்றிலுமாக தவிர்ப்பதே சரி.
நம் மன அமைதி அதனால் மேம்படும்.
அவர்களுக்கு எதையாவது நிருபித்துக்காட்ட நீங்கள் நினைக்கும்வரை உங்கள் மனதில் உண்மையான அமைதி திரும்பவெ திரும்பாது.
No comments:
Post a Comment