Wednesday, December 2, 2020

தேர்தல் கமிஷனின் சுற்றறிக்கையால் பெரும்பதட்டத்தில் திமுக! அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் தானோ!



காலத்துக்கேற்ப தேர்தல் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவது தேர்தல் கமிஷனின் வழக்கமான செயல்பாடுதான். ஆனால் திமுகவைப் பொறுத்தவரை அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதுபோல ஹாட்ரிக் தோல்வி பயத்தில் இருக்கிறது.

இந்நிலையில், பீகாரில் நடைபெற்ற தேர்தலில் முதன்முறையாக முதியோரும், மாற்றுத்திறனாளிகளும் தபால் வாக்குகள் அளிக்க அனுமதி தரப்பட்டது. அதன்மூலம் அவர்கல் வாக்குச்சாவடிக்கு அலைய வேண்டிய அவசியமில்லாத நிலை ஏற்பட்டது. இது வரவேற்கத்தக்க மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.

இந்த பீகார் தேர்தல் முறையை இனிவரும் அனைத்து மாநில தேர்தல்களிலும் பின்பற்றுமாறு தலைமை தேர்தல் கமிஷன், அனைத்து மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.  இந்த சுற்றறிக்கைதான் தற்போது திமுகவுக்கு பெரும்பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதுவரை வாக்குச்சாவடிக்கு வரமுடியாத முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்குப் பதிலாகக் கள்ள ஓட்டு போட்டு ஓட்டு எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம் என்ற திமுகவின் எண்ணத்தில் மண் விழுந்த நிலை. எனவே இந்த சுற்றறிக்கையை அரசியலாக்குகிறது திமுக! பீகார் தேர்தல் முறையைத் தமிழகத்தில் பின்பற்றக்கூடாது என்று உடனே பதட்டத்தோடு அறிக்கை விட்டுள்ளது! விட்டால், தேர்தல் தோல்விக்கு இதுதான் காரணமென்றும் கூறத் தயாராக இருப்பார்கள் போல!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...