Wednesday, December 2, 2020

கீழே சொல்லி இருக்கின்ற வார்த்தைகளை நீங்கள் அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்கள்:

 1.சனி மகா பிரதோசத்தில் கலந்துகொண்டால் மூன்று ஜென்ம பாவங்கள் தீரும்..

2.திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தில் கலந்துகொண்டால் எவ்வளவு பெரிய பாவம் செய்திருந்தாலும் போய்விடும்...
3.கார்த்திகை தீப நாளில் மலையை சுற்றி வந்தால் ஒரு ஜென்மம் முழுவதும் செய்யும் தான தர்ம பலன் கிடைக்கும்...
4.கார்த்திகை தீப நாளில் தீபத்தை பார்த்து ஓம் நமசிவாய என்று ஒரு முறை சொன்னால் 21 லட்சம் மந்திரங்கள் சொன்ன பலன் கிடைக்கும்....
5.கங்கையில் குளித்தால் முன் ஜென்ம பாவம் நீங்கும்....
6.காசி , ராமேஸ்வரம் கடலில் குளித்தால் முன்னோர் சாபம் எல்லாம் ஒரே நாளில் தீர்ந்துவிடும்....
Etc, Etc, Etc
போலியான ஆன்மீகவாதிகளால்/பக்தர்களால் இது போன்ற பொய்யான மூடநம்பிக்கைகள் பரவலாக சொல்லப்படுவதை/பரப்பப்படுவதை அடிக்கடி பார்த்திருப்போம்,
இப்படி எல்லாம் செய்துவிட்டால் நாம் செய்த பாவங்கள் போய்விடும் போல என்று நினைத்துக் கொண்டு தான் மனிதர்கள் பாவங்களுக்கு மேல் பாவங்களாக செய்து கொண்டு இருக்கிறார்கள்.....
உண்மையில் மேலே அவர்கள் சொல்வது போல் எந்த பாவமும் தீராது.....
பாவத்துக்கான தண்டனையை நாம் அனுபவித்தே தான் ஆகவேண்டும்,
ஒருவேளை நாம் செய்த பாவத்தை உணர்ந்து, வருந்தி, திருந்தி இறைவனிடம் மண்டியிட்டால் தண்டனையின் கஷ்டம் கொஞ்சம் குறையுமே ஒழியே தண்டனையில் இருந்து முழுமையாக நம்மை காப்பாற்றி தவறே செய்யாதவர்கள் போல் சுகமாக நம்மை வாழ வைக்க எந்த கடவுளாலும் முடியாது.....
ஒருவேளை சிலரால் முடிந்தால் கூட அவ்வாறு செய்ய மாட்டார்கள்,
காரணம் இந்த பிரபஞ்சத்தில் மிகமிக சக்தி வாய்ந்தது நம்முடைய செயல்/வினை/கர்மா, நாம் என்ன செய்தோமோ அதற்கான பலனை அனுபவித்தே ஆகவேண்டும்,
செய்வதை எல்லாம் செய்துவிட்டு, உணர்ந்து திருந்தாமல் அந்த கோயில் போனா சரியாயுடும், இந்த கடல்ல குளிச்சா பாவம் போயிடும், அந்த தீபத்தை பார்த்துட்டா புண்ணியம் சேர்ந்துடும் என்று கண்ணை மூடிக்கொண்டு போய் கோயில் கோயிலாக விழுவதில் எந்த பாவமும் தீரப்போவதில்லை...
பாவத்தின் தண்டனையை குறைக்க முதல் வழி நம்முடைய தவறை உணர்ந்து வருந்துவது, பாதிக்கப்பட்ட நபரிடமும், இறைவனிடமும் மன்னிப்பு கேட்பது,
அதற்கு பிறகு நல்ல மனிதனாக
நல்ல உள்ளத்தோடு நற்காரியங்களை செய்வது...
நம்முடைய ஆத்ம பலத்தை அதிகரித்து, மனோதிடத்தை அதிகரித்து, தண்டனையை தாங்கும் சக்தியை அதிகரிக்க,
துன்பத்தை கடக்கும் தைரியத்தை அதிகரிக்க எத்தனை கோயில் போனாலும் தவறில்லை...
மாறாக கோயிலுக்கு போய்விட்டாலே பாவம் தீர்ந்து விடும் என்று ஒரு போதும் எண்ணாதீர்கள், அதற்கு கொஞ்சம் கூட வாய்ப்பு இல்லை...
அது முழுக்க முழுக்க மூட நம்பிக்கை.....
அறியாத மக்களுக்கு நடக்காத ஒன்றை பரப்பி மூடநம்பிக்கையில் தள்ளுவதும் கூட ஒருவித பாவம் தான்....
தீபம் என்பது அனைத்திற்கும் மேலான இறைவனின் அம்சம்....
நமக்கு போதுமான விழிப்புணர்வையும் தெளிவையும் தந்து வாழ்க்கையை எளிதாக கடந்திட வழிகாட்டும்படி வேண்டிக் கொள்வதே சிறந்தது......

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...