Friday, December 18, 2020

ஜோதிட சாஸ்திரத்தில் #சுக்கிர பகவான் பலன்கள்.

 சப்தரிஷிகளில் ஒருவரான #பிருகு முனிவருக்கும் கியாதி என்பவருக்கும் மகனாகப் பிறந்தவர் சுக்கிரன் பகவான் ஆவார். அசுரர்களின் குருவாக விளங்கக் கூடியவர்.

ராசி கட்டங்களில் ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்கு அதிபதியாக சுக்கிர பகவான் வருகிறார். சுக்கிர பகவானுக்கு
மீன ராசி உச்ச வீடு ஆகும். கன்னி ராசி நீச வீடு ஆகும் .மிதுனம் மகரம் கும்பம் ராசிகள் நட்பு வீடுகள் ஆகும். மேஷம் விருச்சிகம் தனுசு ராசிக்கு சம வீடுகள் ஆகும். கடகம் சிம்மம் ராசிகள் பகை வீடுகள் ஆகும்.
சுக்கிரனுக்கு சனி பகவான் அதி நட்பு கிரகமாகும் . சுக்கிரனுக்கு புதன் மற்றும் ராகு நட்பு கிரகங்கள் ஆகும். சுக்கிரனுக்கு சூரியன் ,சந்திரன் பகை கிரகங்கள் ஆகும். செவ்வாய், குரு, கேது சம கிரகங்கள் ஆகும்.(பிரகஸ்பதி என்னும் வியாழன் தான் சுக்கிரனை பகையாக கருதுகிறார் என்பதை கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும் குழப்பமடைய வேண்டாம்).
சுக்கிரனின் #காரகங்கள்
வாழ்க்கை துணை, அத்தை, மாமியார், ஆடம்பர வாகனம் ,ஆடம்பர ஆடை ஆபரணங்கள், அலங்காரப்பொருட்கள், வாசனைத் திரவியங்கள், ஆடம்பர தங்கும் விடுதிகள், ஆடம்பரமான கண்ணாடி, விலை உயர்ந்த பூக்கள், இசைக்கருவிகள் கேளிக்கைகள் சங்கீதம், நடனம், கதை, கவிதை, காவியம், இசை மற்றும் பாடல், திரைப்படம் ,நாடகம், சிற்பம் ,அழகு, அழகுணர்ச்சி, புதுமை ,சுகபோக வாழ்க்கை ,ஜால வித்தை, அதிநவீன வசதிகள், காம இச்சை, பெண்கள் மூலமான தொழில்கள், பெண்களுக்காக செய்யப்படும் தொழில்கள், அலட்சியம், கட்டில் மற்றும் மெத்தை, தாசிகள் தொடர்பு, நிறைய பேருடன் உறவு, பெண்களால் ஆதாயம், லட்சுமிகடாட்சம், வெள்ளி ,வைரம், சுத்த வெள்ளை நிறம், பளபளப்பான வர்ணங்கள், ஆங்கிலம் போன்ற அன்னிய மொழிகள், வெண் மொச்சை தானியம், கப்பல் வணிகம், பால் வினை நோய்கள், ஆண்களுக்கு இந்திரியம், பெண்களுக்கு சுரோனிதம், வசந்த காலம்.
சுக்கிரனுக்கு லக்னத்தில் இருந்து நான்காமிடத்தில் #திக்பலம் பெறுவார். லக்னத்திலிருந்து 10ம் இடத்தில் #நிஷ் பலம் பெறுவார் .குறிப்பிட்ட லக்னத்தாருக்கு மட்டும் #கேந்திராதிபத்திய தோஷம் உண்டு. சுக்கிரனுக்கு #ஆறாம் இடம் மட்டும் மறைவுக்கு உண்டான கெடுபலன்கள் உண்டு .ஏனைய கிரகங்களுக்கு உண்டான எட்டாம் இடம் மற்றும் 12-ம் இடம் மறைவு ஸ்தானங்கள் கெடுபலன்களை செய்வதற்கு பதிலாக ஓரளவு நன்மையான பலன்கள் கிடைக்கும்.
சுக்கிரன் சூரியனுடன் சேரும்போது அஸ்தங்கம் அடைந்து இருந்தால்,
தான் கொடுக்க வேண்டிய பலன்களை ஜாதகத்தில் கொடுப்பதற்கு ஜாதகர் மிகவும் சிரமப்பட நேரிடும்.
சுக்கிரனும் சந்திரனும் சேர்க்கை பெறும் போது சில ஜாதகர்களுக்கு கண்களில் நோய் ஏற்படுவதற்கு கண் பார்வை பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. ஒரு சிலருக்கு பால்வினை தொற்று ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
சுக்கிரனுடன் செவ்வாய் சேரும்போது காம இச்சைகள் மேலோங்கும் உணர்ச்சிவசப்பட்ட நபராக ஜாதகர் விளங்குவதற்கு வாய்ப்புகள் உண்டு.
சுக்கிரனுடன் புதன் சேர்க்கை பெற்று ஜாதகத்தில் இருக்கும் போது கலைகளில் ஆர்வம் ஈடுபாடு இருக்கும் அதே நேரத்தில் சற்று வித்தை கர்வமும் இருக்கும்.
சுக்கிரனுடன் குருபகவான் சேர்க்கை பெற்று இருக்கும் போது பெரும்பான்மையான ஜாதகங்களுக்கு குடும்ப வாழ்க்கையிலும் பொருளாதார வாழ்க்கையிலும் சிரமங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.
சுக்கிரனுடன் சனி பகவான் சேர்க்கை பெற்று குறிப்பிட்ட ராசி மற்றும் லக்னத்தை சேர்ந்தவர்களுக்கு மிகுந்த யோகத்தை தரக்கூடிய அமைப்பாகும். சில குறிப்பிட்ட ராசி மற்றும் லக்னத்தை சேர்ந்தவர்களுக்கு பாதிப்புகளையும் ஏற்படுத்தும்.சுக்கிரனுடன் ராகு பகவான் சேர்க்கை பெற்று இருக்கும் போது ஒரு சில ஜாதகர்களுக்கு லாகிரி வஸ்து பயன்படுத்தி அதனால் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.ஒருசிலர் ஆடம்பரமான வாழ்க்கை வாழ கூடியவராக இருப்பார்கள்.
சுக்கிரனுடன் ராகு மற்றும் கேது சம்பந்தப்படும் போது சிலருக்கு குடும்ப வாழ்க்கையில் அல்லது காதல் வாழ்க்கையில் அல்லது திருமண வாழ்க்கையில் சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
சுக்கிர பகவானுக்கு கேந்திராதிபத்திய தோஷம் உண்டு என்றாலும் கூட சில லக்னத்தாருக்கு கேந்திரங்களில் சுக்கிரன் ஆட்சிபெற்று இருக்கும்போது தோஷத்திற்கு பதிலாக மாளவ யோகம் என்ற அற்புதமான சுப பலன்களைத் தரக் கூடிய யோகம் வேலை செய்யும். ஜாதகர் சிறப்பான வாழ்க்கையை வாழ கூடியவராக இருப்பார்.
சில குறிப்பிட்ட லக்னத்தாருக்கு சுக்கிரன் கேந்திரம் மற்றும் திரிகோண ஸ்தானங்களில் ஆட்சி மற்றும் உச்சம் மற்றும் சுப சஷ்டியாம்சம் மற்றும் சுப நாடி அம்சங்களில் இருக்கும்போது அற்புதமான பலன்களை ஜாதகர் அனுபவிப்பார்.
மேலே கொடுக்கப்பட்ட கருத்துக்கள் பொதுக் கருத்துக்கள் மட்டுமே ஒவ்வொருவருடைய ஜாதகத்தில் ஒவ்வொரு கிரகமும் எந்த எந்த ராசிகளில் எந்த எந்த நட்சத்திரங்களில் குறிப்பாக எந்த நட்சத்திர பாதங்களில் இருக்கிறது மற்றும் பாகை கலை விகலையில் இருக்கிறது என்பதனை பொருத்தும் ராசி மற்றும் நவாம்ச மற்றும் சோடச வர்க்கம் மற்றும் ஷட் பலத்தில் எப்படி இருக்கிறது லக்னம் மற்றும் லக்னாதிபதியின் நிலையை பொருத்து ஜாதகரின் யோகங்களையும் தோஷங்களையும் பொருத்து பலன்கள் நுட்பமாக மாறுபடும்
தொடர்ந்து வரக்கூடிய பதிவுகளில் ஒரு சில உதாரண ஜாதகங்களுடன் சுக்கிரனை கொண்டும் ஏனைய கிரகங்களை கொண்டும் நாம் விரிவாக காணலாம்.
நன்றி !

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...